உலகுசார் சபை
உலகுசார் சபை என்பது கத்தோலிக்க திருச்சபையில் அர்ப்பணவாழ்வு சபை அமைப்பு முறைகளில் ஒன்றாகும். இதில் இருப்போர் உலகில் வாழ்ந்து கொண்டே நற்செய்தி அறிவுரைகளை கடைபிடிக்க முயற்சி செய்கிறனர். உலகின் புனிதப்படுத்துதலுக்கு சிறப்பாக அதன் உள்ளிருந்தவாறே உழைக்கின்றனர். துறவற சபையினரைப் போல இவர்கள் சமூகமாக கூடி வாழ்வதில்லை.
இவ்வகை அர்ப்பணவாழ்வு சபைகள் முதன்முதலில் பன்னிரண்டாம் பயஸினால் 1947இல் அனுமதிக்கப்பட்டன. உலகுசார் சபைகளை அமைக்க இப்போதய வழக்குப்படி திருத்தந்தையோ அல்லது மறைமாவட்ட ஆயரோ அனுமதி வழங்களாம். ஏறத்தாழ 60,000 நபர்கள் 200க்கும் மேற்பட்ட உலகுசார் சபைகளில் உறுப்பினராக உள்ளனர்.
உலகுசார் சபையின் ஓர் உறுப்பினரது அர்ப்பணம் அவர் பொதுநிலையினராயினும் அல்லது திருப்பணியாளராயினும் இறைமக்களது நடுவில் அவருக்குரிய திருச்சபைச் சட்டமுறையான நிலையை மாற்றுவது இல்லை. ஆகவே நற்செய்தி அறிவுரைகளை கடைபிடிக்க விழையும் மறைமாவட்ட திருப்பணியாளர்கள் அர்ப்பண வாழ்வு சபைகளில் சேறுவர்.
கப்புச்சின் சபையின் பிரிவாக Institute of the Maids of the Poor என்பதே இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் உலகுசார் சபையாகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Historical Background @ maidsofthepoor.com". Archived from the original on 2013-09-26. பார்க்கப்பட்ட நாள் 9 ஜூலை 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)