உலக இதய கூட்டமைப்பு

உலக இதய கூட்டமைப்பு (World Heart Federation) என்பது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவினைத் தளமாகக் கொண்ட ஒரு அரசு சாரா அமைப்பாகும். இந்த அமைப்பு 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

வரலாறு

தொகு

1978ஆம் ஆண்டில் பன்னாட்டு இதயவியல் சங்கம் பன்னாட்டு இதயவியல் கூட்டமைப்புடன் (இது 1970 இல் நிறுவப்பட்டது) இணைந்து பன்னாட்டுச் சங்கம் மற்றும் இதயவியல் கூட்டமைப்பாக உருவாகியது. இந்த அமைப்பின் பெயரானது 1998-இல் உலக இதய கூட்டமைப்பு என்று மாறியது.[1]

மாநாடு

தொகு

இந்த கூட்டமைப்பு உலக இதயவியல் மாநாட்டை நடத்துகிறது. 1933-ல் ப்ராக் நகரில் இதயநோய் நிபுணர்களின் பூர்வாங்க மற்றும் சற்றே முறைசாரா பன்னாட்டுக் கூட்டம் நடைபெற்றது, ஆனால் நாசிசம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1946ஆம் ஆண்டு வரை நடைபெறவில்லை. 1946ஆம் ஆண்டுதான் மெக்சிகோ நகரில் இதயவியல் மாநாடு நடைபெற்றது. முதல் உலக மாநாடு 1950ஆம் ஆண்டு நடைபெற்றது.[2]

முதல் உலக இதயவியல் மாநாடு 1950ஆம் ஆண்டு செப்டம்பரில் பாரிசில் பன்னாட்டு இதயவியல் சங்கத்தின் ஆதரவுடன் கூட்டப்பட்டது. இந்நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. அடுத்தடுத்த மாநாடுகள் 2006 வரை நான்கு வருட இடைவெளியில் நடத்தப்பட்டன. பின்னர் இரண்டு வருட இடைவெளியில் மாநாடுகள் நடத்தப்பட்டன.[1]

உலக இதய தினம்

தொகு

" உலக இதய தினம் " 2000ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை மரணத்திற்கு உலகின் முக்கிய காரணங்கள் என்பதைத் தெரிவிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அனுசரிக்கப்படுகிறது.[3] உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று கொண்டாடப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Our History". World Heart Federation. Archived from the original on 18 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 18 June 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Snellen, HA (February 1980). "Birth and growth of the European Society of Cardiology.". European Heart Journal 1 (1): 5–7. doi:10.1093/oxfordjournals.eurheartj.a061095. பப்மெட்:7026246. 
  3. "World heart day 2014: salt reduction saves lives.". Central European Journal of Public Health 22 (3): 206. September 2014. பப்மெட்:25438401. 
  4. "What is World Heart Day?". World Heart Day. பார்க்கப்பட்ட நாள் 2020-10-05.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_இதய_கூட்டமைப்பு&oldid=3928075" இலிருந்து மீள்விக்கப்பட்டது