உலக இளையோர் நாள் 2000
உலக இளையோர் நாள் 2000 என்பது கத்தோலிக்க திருச்சபையில் 2000-ஆம் ஆண்டில், உரோமை நகரம், இத்தாலியில் நிகழ்ந்த இளையோருக்கான உலக இளையோர் நாள் நிகழ்வாகும். இது ஆகத்து 15 முதல் 20 வரை நிகழ்ந்தது.
நாள் | ஆகத்து 15–ஆகத்து 20, 2000 |
---|---|
அமைவிடம் | உரோமை நகரம், இத்தாலி |
கருப்பொருள் | "வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்" (யோவா 1:14) |
இந்த நிகழ்வு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், கிறிஸ்து பிறப்பின் 2000-ஆவது ஆண்டினையொட்டி அறிவித்த யூபிலி ஆண்டோடு இணைந்திருக்க செய்யப்பட்டது. இதுவே இந்த உலக இளையோர் நாளின் கருப்பொருளாகவும் அமைந்தது.
உலக இளையோர் நாளின் போது புனித பேதுரு பேராலய சதுக்கத்தில் இறுதி முடிவுத் திருப்பலி நிகழாதது இதுவே முதன் முறையாகும்.