உலக உணவு கழகம்
உலக உணவு கழகம் (World Food Council) என்பது உலக உணவு மாநாடு பரிந்துரைத்ததன் மூலம் டிசம்பர் 1974 இல் ஐ.நா. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நிறுவிய அமைப்பாகும். இதன் தலைமையகம் இத்தாலிலுள்ள ரோம் ஆகும். உலக உணவு கழகத்தின் குறிக்கோள், விவசாய அமைச்சகங்களின் பொருட்களை ஒருங்கிணைத்து ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பது மற்றும் பசியைப் போக்குவது ஆகும். 1993 இல் உலக உணவுக் கழகம் அதிகாரப்பூர்வமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு சில ஐ.நா. அமைப்புகளில் இதுவும் ஒன்றாகும். உலக உணவு கழகத்தின் பணிகள் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் உலக உணவு திட்டம் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.