உலக தங்கக் குழு

உலக தங்கக் குழு (World Gold Council), தங்க தொழில்துறைக்கான பன்னாட்டு வர்த்தக சங்கமாகும் . இது இலண்டனை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா , சீனா , சிங்கப்பூர் , ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்காவில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.[1]இந்த அமைப்பின் உறுப்பினர்கள் உலகம் முழுவதும் தங்கச் சுரங்க நிறுவனங்களைக் கொண்டுள்ளனர்.[2].சந்தை மேம்பாட்டின் மூலம் தங்கத்திற்கான தேவையைத் தூண்டுவதும், நிலை நிறுத்துவதும் இதன் நோக்கமாகும் . [3]

உலக தங்கக் குழு
உருவாக்கம்1987 (38 ஆண்டுகளுக்கு முன்னர்) (1987)
வகைவணிகச் சங்கம்
சட்ட நிலைசெயலில்
தலைமையகம்இலண்டன், ஐக்கிய இராச்சியம்
சேவை பகுதி
உலகம் முழுவதும்
வலைத்தளம்https://www.gold.org/

உலக தங்க கவுன்சில் 1987ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நிறுவனமான இண்டர்கோல்டுடன் ஒன்றிணைந்து அதன் பன்னாட்டு அலுவலகங்களை கொண்டுள்ளது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக பல நாடுகளில் தென்னாப்பிரிக்காவிலிருந்து தங்கம் இறக்குமதி தடைசெய்யப்பட்டது.[4][5][6]

இது தங்கத்திற்கான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுதல், தங்கப் பத்திரங்கள் வெளியிடுதல், இந்தியா மற்றும் சீனாவில் தங்கக் குவிப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தல், [7] மற்றும் அதன் நிறுவன செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஆவணங்களையும் வெளியிடும் பணி மேற்கொள்கிறது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "World Gold Council Headquarters & Offices". www.gold.org. Archived from the original on 3 July 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-10-12.
  2. "World Gold Council Members". www.gold.org. Archived from the original on 3 July 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
  3. "Who We Are | World Gold Council". www.gold.org. Archived from the original on 12 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
  4. "Major Producers of Gold Form Trade Association". Wall Street Journal: p. 1. 17 October 1986. ProQuest 397962100. 
  5. Secter, Bob (2 October 1985). "Reagan Bans Imports of S. Africa Krugerrand". Los Angeles Times. https://www.latimes.com/archives/la-xpm-1985-10-02-mn-16058-story.html. 
  6. Walker, Pat (7 November 1986). "Chamber of Mines agrees to merge Intergold into World Gold Council". American Metal Market 94: 1–3. 
  7. "World Gold Council and ICBC launch first gold accumulation plan in China". www.gold.org. 16 December 2010. Archived from the original on 24 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-24.
  8. Corcoran, Terence (March 15, 2024). "Terence Corcoran: Did Idris Elba's 'Goldfather' video boost gold prices?". Financial Post. பார்க்கப்பட்ட நாள் 3 July 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_தங்கக்_குழு&oldid=4105495" இலிருந்து மீள்விக்கப்பட்டது