உலக தூக்க நாள்
உலக தூக்க நாள் (World Sleep Day) ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு தூக்க மருத்துவத்துக்கான உலக அமைப்பினால் 2008 ஆம் ஆண்டு முதல் நினைவுகூரப்படுகிறது.[1] ஆரோக்கியமான, சிறந்த தூக்கத்தின் பயன்களைக் கொண்டாடுவதும், தூக்கப் பிரச்சினைகள், மற்றும் அதற்கான மருத்துவம், கல்வி, சமூக நோக்கு ஆகியவற்றை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதும், தூக்கக் கோளாறுகளின் தடுப்பு மற்றும் அவற்றின் மேலாண்மையை ஊக்குவிப்பதும் இந்நிகழ்வின் நோக்கமாகும்.
ஆண்டு நிகழ்வுகள்
தொகுஉலக தூக்க நாள் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இடம் பெறுகிறது. (மார்ச் சம இரவு நாள்).[2] முதலாவது தூக்க நாள் 2008 மார்ச் 14 அன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுகளில், தூக்கம் தொடர்புடைய விவாதங்கள், மற்றும் கல்விக் கண்காட்சிகள் ஆகியன இடம்பெறுகின்றன.
ஆண்டு | நாள் | குறிக்கோள் வாசகம் |
---|---|---|
2008 | 14 மார்ச் | 'நன்றாக தூங்க, விழித்து வாழ்'[3] |
2009 | 20 மார்ச் | 'எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டி, பாதுகாப்பாக வந்து சேர்'[4] |
2010 | 19 மார்ச் | 'நன்றாக தூங்கு, ஆரோக்கியமாகத் தங்கு'[5] |
2011 | 18 மார்ச் | 'நன்றாகத் தூங்கு, ஆரோக்கியமாக வளர்'[3][6] |
2012 | 16 மார்ச் | 'எளிதான சுவாசம், நன்றாகத் தூங்கு'[7] |
2013 | 15 மார்ச் | 'நல்ல தூக்கம், ஆரோக்கியமான முதுமை'[7] |
2014 | 14 மார்ச் | 'அமைதியான தூக்கம், எளிதாக சுவாசம், ஆரோக்கியமான உடல்'[7] |
2015 | 13 மார்ச் | 'தூக்கம் நன்றாக இருந்தால், ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகும்' |
2016 | 18 மார்ச் | 'நல்ல தூக்கம் ஓர் அடையக்கூடிய கனவு'[7] |
2017 | 17 மார்ச் | நிம்மதியாக தூங்குங்கள், வாழ்க்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் |
2018 | 16 மார்ச் | உறக்க உலகில் சேருங்கள், வாழ்க்கையை அனுபவிக்க உங்கள் தாளங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் |
2019 | 15 மார்ச் | ஆரோக்கியமான தூக்கம், ஆரோக்கியமான முதுமை |
2020 | 13 மார்ச் | சிறந்த தூக்கம், சிறந்த வாழ்க்கை, சிறந்த உலகம்[8] |
2021 | 19 மார்ச் | வழக்கமான தூக்கம், ஆரோக்கியமான எதிர்காலம்[9] |
2022 | 18 மார்ச் | தரமான தூக்கம், நல்ல மனம், மகிழ்ச்சியான உலகம்[10] |
மேற்கோள்கள்
தொகு- ↑ World Sleep Day World Association of Sleep Medicine, accessed 19 March 2011
- ↑ "Good Sleep is a Reachable Dream". பார்க்கப்பட்ட நாள் 2016-03-17.
- ↑ 3.0 3.1 http://www.dailymail.co.uk/home/moslive/article-2003854/Sleep-Im-going-meaning-life-David-Flusfeder.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2016-03-19.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-02-26. பார்க்கப்பட்ட நாள் 2016-03-19.
- ↑ http://www.dutchdailynews.com/world-sleep-day-2011/
- ↑ 7.0 7.1 7.2 7.3 http://worldsleepday.org/
- ↑ "World Sleep Day 2015 toolkit" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2020-03-12.
- ↑ "World Sleep Day 2021 [Hindi]: जानिए नींद से जुड़े रोचक तथ्य व Quotes". Tube Light Talks (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-03-19. பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
- ↑ "StackPath". worldsleepday.org. பார்க்கப்பட்ட நாள் 2022-03-16.