உலக நனிசைவ நாள்
உலக நனிசைவ நாள் (World Vegan Day) ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் முதல் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.[1] உலக வீகன் தினம் என்ற பெயராலும் இந்நிகழ்வு அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள சைவ உணவு உண்பவர்களால் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
உலக நனிசைவ நாள் World Vegan Day | |
---|---|
![]() உலக நனிசைவ நாள் சின்னம் | |
வகை | பன்னாட்டு அளவில் |
நாள் | 1 நவம்பர் |
நிகழ்வு | ஆண்டுதோறும் |

பால் மற்றும் விலங்குகளில் இருந்து கிடைக்கும் உணவு பொருட்களை சாப்பிடாமல் அறவே தவிர்த்து விட்டு தாவரங்கள் சார்ந்த காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், பழங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உணவு முறையை நனிசைவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
நோக்கம் தொகு
விலங்குகள், மனிதர்கள் மற்றும் இயற்கை சூழலுக்கு சைவ உணவுகள் அளிக்கும் நன்மைகளை பரப்புரை செய்வது அதற்கான கடைகளை அமைப்பது, நினைவு மரங்களை நடுதல் போன்ற செயல்பாடுகள் இந்நாளில் மேற்கொள்ளப்படுகின்றன. நனிசைவ வாழ்க்கை முறையை பின்பற்ற மக்கள் இந்த நாளில் ஊக்குவிக்கப்படுகிறார்கள். நனிசைவ உணவு முறை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி[2], விலங்குகளின் நல்வாழ்வை பாதுகாக்கவும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பெரிதும் உதவும் என்பதும் நனிசைவர்களின் நம்பிக்கையாகும்.
வரலாறு தொகு
இந்நிகழ்வு 1994 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் அப்போதைய நனிசைவ சங்கத்தின் தலைவரான லூயிசு வாலிசால் நிறுவப்பட்டது. அமைப்பு நிறுவப்பட்ட 50 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் "நனிசைவம்" மற்றும் "நனிசைவ உணவு" என்ற சொற்கள் உருவாக்கப்பட்டன.
சங்கம் நவம்பர் 1944 இல் நிறுவப்பட்டது என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் சரியான தேதிதான் தெரியவில்லை. எனவே நான் நவம்பர் 1 ஆம் தேதிக்கு செல்ல முடிவு செய்தேன். ஏனெனில் இந்த தேதி அறுவடைநாளின் இறுதி நாளாகவும் அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதிக் கொண்டாடப்படும் நாளாகவும் இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. மேலும் இந்நாள் - விருந்து மற்றும் கொண்டாட்டத்திற்கான பாரம்பரிய நேரமாகவும் பொருத்தமான மற்றும் மங்களகரமான நாளாகவும் இருந்தது என 2011 ஆம் ஆண்டில் லூயிசு வாலிசு கூறினார்."[3]
சைவம் நனிசைவம் வேறுபாடு தொகு
இறைச்சி, முட்டை, கோழி, மீன் அல்லது பிற விலங்கு பொருட்களை சாப்பிடாமல் விலங்கிடமிருந்து கிடைக்கும் பால், பால் பொருட்கள், தயிர், வெண்ணெய், பனீர், நெய் உள்ளிட்டவற்றை உண்பவர்கள் சைவ உணவர்களாவர். விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பால், முட்டை போன்ற எந்த வகையான உணவுப்பொருளையும் எடுத்துக் கொள்ளாதவர்கள் நனிசைவர்கள் எனவும் கருதப்படுகிறார்கள்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "உலக வீகன் தினம் 2021 : இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்!" (in ta). 2021-11-01. https://tamil.news18.com/news/lifestyle/food-world-vegan-day-2021-theme-history-and-significance-esr-ghta-602351.html.
- ↑ "வீகன் உணவு முறையால் ஆரோக்கியம் மேம்படுமா?" (in ta). 2018-09-10. https://www.bbc.com/tamil/science-45465346.
- ↑ "Transcript of Louise Wallis' Live ARZone Guest Chat - Animal Rights Zone". arzone.ning.com. September 18, 2011. http://arzone.ning.com/profiles/blogs/transcript-of-louise-wallis-live-arzone-guest-chat.
புற இணைப்புகள் தொகு
- பொதுவகத்தில் உலக நனிசைவ நாள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.