உலக நுரையீரல் அழற்சி நாள்

உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) என்பது நுரையீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் ஆண்டு தோறும் நவம்பர் 12 ஆம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும். சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் முதலாவது உலக நுரையீரல் அழற்சி நாளை கொண்டாடின. 2010 முதல் இது நவம்பர் 12 ஆம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகளாவிய அளவில் நியூமோனியா நோய் தாக்கத்தால் ஆண்டுக்கு சராசரியாக 1.6 மில்லியன் பேர் இறக்கின்றனர். 5 வயதிற்கும் குறைந்த 155 மில்லியன் குழந்தைகள் பாதிப்படைகின்றனர். இது எயிட்சு, மலேரியா, எலும்புருக்கி நோய் போன்றவற்றினால் இறப்பு ஏற்படுவதை விட அதிகம் என மருத்துவ சங்க குறிப்பு தெரிவிக்கின்றது.[1][2]

நியூமோனியா, நுரையீரல், தொற்று மூளை சவ்வு பாதிப்பு, ரத்தத்தில் நோய் கிருமிகள் கலப்பு, காதில் நோய் பாதிப்பு, சைனஸைடிஸ் போன்ற வகை கொண்டது. பச்சிளம் குழந்தை, குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இருக்கும் வளர்ச்சியடையாத நுரையீரல், குறுகிய மூச்சுக்குழல், ஊட்டச்சத்து பற்றாக்குறை, வளர்ச்சியடையாத நோய் எதிர்ப்பு மண்டலம் போன்ற காரணங்களால், இத்தகைய தொற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவச் செய்தி கூறுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Forgotten Killer of Children" (PDF). Archived from the original (PDF) on 2018-05-14. பார்க்கப்பட்ட நாள் 2014-11-12.
  2. Nicholas Kristof

வெளி இணைப்புகள்

தொகு