உலக வங்கி முதன்மை பொருளாதார வல்லுநர்

உலக வங்கி முதன்மை பொருளாதார வல்லுநர் (World Bank Chief Economist) ஆனவர், அகில உலக அளவிலும் பிராந்திய அளவிலும் நாடுகள் அளவிலும், உலக வங்கியின் முன்னேற்றத் திட்டங்களுக்கும் பொருளாதார ஆய்வு நடவடிக்கைகளுக்கும் தேவையான அறிவுசார் தலைமையும் வழிகாட்டுதலையும் அளிக்கிறார். அவர் உலக வங்கியின் முதன்மை மேலாண்மை அணியின் உறுப்பினர் ஆவார். உலக வங்கியின் தலைவர் மற்றும் வங்கியின் மேலாண்மை குழுவுக்கும் பொருளாதாரம் சார்ந்த அறிவுரைகளை அளிக்கிறார்.

உலக வங்கி முதன்மை பொருளாதார வல்லுநர்களின் பட்டியல்தொகு

  • ஹாலிஸ் பி. ஜெனரி — 1972–1982
  • ஆன் ஆஸ்பான் குரூகர் — 1982–1986
  • ஸ்டான்லி பிஷர் — 1988–1990
  • லாரன்ஸ் சம்மர் — 1991–1993
  • மைக்கேல் புருனோ — 1993–1996
  • ஜோசப் இ. ஸ்டிக்ளிட்ஸ் — 1997–2000
  • நிக்கோலஸ் ஸ்டெர்ன் — 2000–2003
  • பிராங்க் பொர்கிக்னன் — 2003–2007
  • ஜஸ்டின் யிஃபு லின் — 2008 சூன் முதல்