உலக வாழை மன்றம்

உலக வாழை மன்றம் (World Banana Forum-WBF) என்பது வாழைத் தொழில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த திறந்த உரையாடலை ஊக்குவிப்பதற்காக உலகளாவிய வாழை விநியோகச் சங்கிலியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பங்கேற்பாளர்களுக்கான ஒரு நிரந்தர இடமாகும்.[1] உலக வாழை மன்ற செயலகம் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் (FAO) வழங்கப்படுகிறது. வாழையுடன் தொடர்புடைய சில்லறை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள், தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள், நுகர்வோர் சங்கங்கள், அரசாங்கங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் குடிமை சமூக அமைப்புகளை உலக வாழை மன்றம் ஒன்றிணைக்கிறது.[2]

உலக வாழை மன்றம்
World Banana Forum
உருவாக்கம்2009
வகைபல்வேறு பயன்பாட்டாளர் அவை
தலைமையகம்உரோம், இத்தாலி
வலைத்தளம்www.fao.org/wbf

வரலாறு

தொகு

உலக வாழை மன்றம் 2009ஆம் ஆண்டில் உரோம் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் உலகம் முழுவதும் வாழைப்பழத் துறையைச் சேர்ந்த 150 பங்குதாரர்களின் பங்களிப்புடன் தொடங்கப்பட்டது. மிகவும் அவசர சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நடைமுறை நடவடிக்கைகளைச் செயல்படுத்த இவர்கள் 3 சிறப்புப் பணிக்குழுக்களை உருவாக்கியுள்ளனர்: நிலையான உற்பத்தி முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த WG01, மதிப்பு விநியோகத்தில் WG02 மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீது WG03 பணியாற்றுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_வாழை_மன்றம்&oldid=3159134" இலிருந்து மீள்விக்கப்பட்டது