உலுத்விகைட்டு
உலுத்விகைட்டு (Ludwigite) என்பது Mg2FeBO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மமாகும். மக்னீசியம்-இரும்பு போரேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது.
உலுத்விகைட்டு Ludwigite | |
---|---|
அமெரிக்காவின் யூட்டா மாநிலத்திலுள்ள சால்ட்டு லேக்கு மாகாணத்தில் கிடைத்த 0.5 செ.மீ வரை பளபளப்பான, கருப்பு, உலோக, ஊசிவடிவ உலுத்விகைட்டு படிகங்களின் ஆரப்போக்குத் திரட்டுகள் | |
பொதுவானாவை | |
வகை | போரேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Mg2Fe3+BO5 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 195.26 கி/மோல் |
நிறம் | கரிப்பிசின்-கருப்பு, ஆலிவ் கருப்பு |
படிக இயல்பு | திரட்சி - நாரிழை |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
பிளப்பு | [001] சரிபிளவு |
முறிவு | நொறுங்கும் – சங்குருவம் – Very brittle fracture producing small, conchoidal fragments. |
மோவின் அளவுகோல் வலிமை | 5.5 |
மிளிர்வு | பட்டும் துணை உலோகத் தன்மையும் |
கீற்றுவண்ணம் | பசுமை கலந்த கறுப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது, மெல்லிய துண்டுகளில் ஒளி கசியும் |
ஒப்படர்த்தி | 3.6 – 3.8 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα = 1.830 – 1.850 nβ = 1.830 – 1.850 nγ = 1.940 – 2.020 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.110 – 0.170 |
பலதிசை வண்ணப்படிகமை | X = Y = அடர் பச்சை; Z = அடர் செம்பழுப்பு |
2V கோணம் | அளக்கப்பட்டது: 20° to 45° |
கரைதிறன் | அமிலங்களில் மெல்ல கரையும் |
Alters to | இலிமோனைட்டு |
மேற்கோள்கள் | [1][2] |
பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் உலுத்விகைட்டு கனிமத்தை Ldw[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
உலுத்விகைட்டு பொதுவாக மெக்னீசியன் இரும்பு கலந்த கரடுமுரடான் உருமாறிய பாறைகளிலும் பிற உயர் வெப்பநிலை தொடர்புள்ள உருமாற்ற படிவுகளிலும் காணப்படுகிறது. மேக்னடைட்டு, பார்சுடரைட்டு, கிளினோகூமைட்டு மற்றும் போரேட்டுகளான வான்செனைட்டு மற்றும் சைபெலைட்டு கனிமங்களுடன் இணைந்து காணப்படுகிறது.[2] இரும்பு(II)-இரும்பு(III) போரேட்டு கனிம வான்செனைட்டுடன் உலுத்விகைட்டு ஒரு திண்ம கரைசல் தொடரை உருவாக்குகிறது.[1]
முதன்முதலில் 1874 ஆம் ஆண்டில் தென்மேற்கு உருமேனியாவிலுள்ள காரசு-செவெரின் மாகாணம் ஓக்னா தி பியர் பகுதியிலும், பனாட்டு மலைத் தொடர்களிலும் கண்டறியப்பட்டது. வியன்னா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஆத்திரிய வேதியியலாளர் எர்னசுட்டு உலுத்விக்கு (1842-1915) நினைவாக கனிமத்திற்கு உலுத்விகைட்டு பெயரிடப்பட்டது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Ludwigite on Mindat.org
- ↑ 2.0 2.1 Handbook of Mineralogy
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.