உலூனா 13
Luna 13
திட்ட வகைநிலாத் தரையிறங்கி
காஸ்பார் குறியீடு1966-116A
சாட்காட் இல.02626
திட்டக் காலம்6 நாள், 19 ம, 56 ம.து..
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புGSMZ Lavochkin
ஏவல் திணிவு1,620 கிகி[1]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்21 திசம்பர் 1966, 10:17:08 ஒபொநே[2]
ஏவுகலன்மோல்நியா-எம் 8K78M
ஏவலிடம்பைக்கோனூர், களம் 1/5
திட்ட முடிவு
கடைசித் தொடர்பு28 திசம்பர் 1966, 06:13 கிரீன்விச் நேரம்
நிலா தரையிறங்கி
தரையிறங்கிய நாள்24 திசம்பர் 1966, 18:04 கிரீன்விச் நேரம்
தரையிறங்கிய பகுதி18°52′N 62°03′W / 18.87°N 62.05°W / 18.87; -62.05 [3]

உலூனா 13 (E - 6M தொடர்) (Luna 13 (E-6M series))என்பது சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டத்தின் ஆளில்லா விண்வெளி பயணமாகும்.

முழு கண்ணோட்டம்

தொகு

உலூனா 13 விண்கலம் புவி வட்டணையில் இருந்து நிலா நோக்கி ஏவப்பட்டு , 1966 திசம்பர் 24 அன்று ஓசியானசு புரோசெல்லாரம் ( புயற்கடல்) பகுதியில் மென்மையான தரையிறக்கத்தை நிறைவு செய்தது.

விண்கலத்தின் இதழ்கள் திறக்கப்பட்டு , ஆன்டெனாக்கள் நிறுவப்பட்டன , தரையிறங்கிய நான்கு நிமிடங்களுக்குப் பிறகு புவிக்கான தொலைத்தொடர்புகள் தொடங்கின. 1966 திசம்பர் 25, 26 ஆம் தேதிகளில் விண்கல தொலைக்காட்சி அமைப்பு அருகிலுள்ள நிலா நிலப்பரப்பின் இயற்காட்சிகளை வெவ்வேறு சூரியக் கோணங்களில் அனுப்பியது. ஒவ்வொரு காட்சியையும் அனுப்ப சுமார் 100 நிமிடங்கள் தேவைப்பட்டன. நிலா மேற்பரப்பின் இயக்க, இயற்பியல் பண்புகள், அண்ட கதிர் தெறிப்பு பற்றிய தரவுகளைப் பெறுவதற்காக விண்கலத்தில் இயந்திர மண் அளவீட்டு ஊடுருவுமாணியும் கதிர்வீச்சு அடர்த்திமானியும் பொருத்தப்பட்டிருந்தன. 1966 திசம்பர் 28 அன்று விண்கலத்திலிருந்து தகவல் தொடர்புகள் இழக்கப்பட்டன.

உலூனா 9, அமெரிக்க சர்வேயர் 1 க்குப் பிறகு உலூனா 13 சந்திரனின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கிய மூன்றாவது விண்கலமாக மாறியது இந்த ஆய்கலம் 1966 திசம்பர் 24 அன்று 18:01 ஒபொநே மணிக்கு க்ராஃப்ட் மற்றும் செலூகசு பள்ளங்களுக்கு இடையில் 18°52 ' வடக்கு அகலாங்கிலும் 62°3 ' மேற்கு நெட்டாங்கிலும் தரையிறங்கியது. அதன் முன்னோடிகளைப் போலல்லாமல் , உலூனா 13 தரையிறங்கி 113 கிலோகிராம் எடையுடன் வழக்கமான படம் எடுப்பு அமைப்புடன் கூடுதலான அறிவியல் கருவிகளின் தொகுப்பையும் கொண்டிருந்தது.[4]

லேண்டரின் அழுத்த சட்டகத்திற்குள் ஒரு மூவச்சு முடுக்கமானி , 20 முதல் 30 சென்டிமீட்டர் (7.9 முதல் 11.8 அங்குலம்) ஆழத்திற்கு, மட்கட்டமைப்பைத் தீர்மானிக்க, மண்ணை வெட்டியபோதும் தரையிறங்கும் போதும் நிலவிய விசைகளைப் பதிவு செய்தது. ஒரு ஜோடி விற்சுருள்கள் ஏற்றப்பட்ட சட்டங்களும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. இந்த ஏற்றங்களில் ஒன்று நிலாத் தரைமண்ணில் ஊடுருவத் தேவையான விசைகளை அளவிட வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டம் ஊடுருவுமானியைக் கொண்டிருந்தது. ஊடுருவல் விசை ஒரு மணித்துளி வெடிப்பு மின்னூட்டத்தால் வழங்கப்படுகிறது. மற்றொரு சட்டம் ஒரு பின்னோக்கிச் சிதறல் அடர்த்திமானியைக் கொண்டிருந்தது , இது நிலாவுக்கு அருகிலுள்ள மேற்பரப்பு மண் அடர்த்தியைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டது. நான்கு கதிரலைமானிகள் மேற்பரப்பில் இருந்து அகச்சிவப்பு கதிர்வீச்சைப் பதிவு செய்தன , இது நண்பகல் வெப்பநிலையை 117 ±3 °செ ஆகக் குறித்தது. அதே நேரத்தில் கதிரளைமானி கதிர்வீச்சு அளவு மனிதர்களுக்கு குறைவான இடர் தருவதாகவே இருந்ததைச் சுட்டிக் காட்டியது.

நிலா மேற்பரப்பின் மொத்தம் ஐந்து இயற்கைக் காட்சிகளைத் தரையிறங்கி திருப்பி அனுப்பியது , இது உலூனா 9 இல்பார்த்ததை விட மென்மையான நிலப்பரப்பைக் காட்டுகிறது. இரண்டு படக் கருவிகளில் ஒன்று (முப்பருமானப் படங்களைத் திருப்பித் தரும் நோக்கக் கருவி) தோல்வியடைந்தது , ஆனால் இது புகைப்படங்களின் தரத்தை குறைக்கவில்லை. ஊடுருவல் அளவி நிலா மண்ணடுக்கு அடர்த்தியை 800கிகி / மீ3 இல் அளந்தார்.[5]

ஒரு முழுமையான வெற்றிகரமான பணிக்குப் பிறகு , டிசம்பர் 28 அன்று 06:13 ஒபொநே வில் கலத்தில் இருந்த மின்கல அடுக்குகள் தீர்ந்துவிட்டதால் தொடர்பு இழக்கப்பட்டது.

மேலும் காண்க

தொகு
  • நிலாவில் உள்ள செயற்கை பொருட்களின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. Siddiqi, Asif (2018). Beyond Earth: A Chronicle of Deep Space Exploration, 1958–2016 (PDF) (second ed.). NASA History Program Office.
  2. Siddiqi, Asif (2018). Beyond Earth: A Chronicle of Deep Space Exploration, 1958–2016 (PDF) (second ed.). NASA History Program Office.
  3. "NASA NSSDC Master Catalog - Luna 13". பார்க்கப்பட்ட நாள் 24 December 2010.
  4. "In Depth | Luna 13". NASA Solar System Exploration. Archived from the original on 18 August 2019. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.
  5. {{cite book}}: Empty citation (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலூனா_13&oldid=3789330" இலிருந்து மீள்விக்கப்பட்டது