உலூனா 9
உலூனா 9 (Luna 9 - Луна-9) என்பது சோவியத் ஒன்றியத்தின் உலூனா திட்டத்தின் ஆளில்லா விண்வெளி பயணமாகும். 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி உலூனா 9 விண்கலம் ஒரு வான்பொருளில் உயிர்வாழக்கூடிய தரையிறக்கத்தை அடைந்த முதல் விண்கலமாகும்.[5]
A replica of Luna 9 on display in the Museum of Air and Space Paris, Le Bourget. | |
திட்ட வகை | Lunar lander |
---|---|
இயக்குபவர் | GSMZ Lavochkin |
காஸ்பார் குறியீடு | 1966-006A |
சாட்காட் இல. | 01954 |
திட்டக் காலம் | 6 days, 11 hours, 10 minutes |
விண்கலத்தின் பண்புகள் | |
விண்கல வகை | Ye-6 |
தயாரிப்பு | GSMZ Lavochkin |
ஏவல் திணிவு | 1583.7 kg[1] |
Landing mass | 99 kg |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | 31 January 1966, 11:41:37 UTC[1] |
ஏவுகலன் | Molniya-M 8K78M s/n 103-32 |
ஏவலிடம் | Baikonur, Site 31/6 |
திட்ட முடிவு | |
கடைசித் தொடர்பு | 6 February 1966, 22:55 GMT |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
Reference system | Geocentric[2] |
சுற்றுவெளி | Highly elliptical |
அண்மைgee | 220 km |
கவர்ச்சிgee | 500000 km |
சாய்வு | 51.8° |
சுற்றுக்காலம் | 14.96 days |
Epoch | 31 January 1966 |
Lunar தரையிறங்கி | |
தரையிறங்கிய நாள் | 3 February 1966, 18:45:30 GMT |
தரையிறங்கிய பகுதி | 7°05′N 64°22′W / 7.08°N 64.37°W[3] or 7°08′N 64°22′W / 7.13°N 64.37°W [4] |
விண்கலம்
தொகுதரையிறங்கி 99 கிலோகிராம் (218 பவுண்டு) எடையும் 58 சென்டிமீட்டர் (23 அங்குலம்) அளவும் கொண்டது. இது ஒரு கோளவடிவப் பெட்டகத்தைக் கொண்டிருந்தது. இது ஒரு தரையிறங்கும் பையை பயன்படுத்தி, மணிக்கு 22 கிலோமீட்டர் (14 மைல் ) வேகத்தைத் தாங்கி இறங்கவல்லது.[6] இது காற்று புகாதபடி, மூடப்பட்ட கொள்கலன் ஆகும். இதில் ஒரு நிரல் நேர சாதனமும் வெப்ப கட்டுப்பாட்டு அமைப்புகளும் அறிவியல் கருவிகளும் மின் வாயில்களும் ஒரு தொலைக்காட்சி அமைப்பும் இருந்தன.
இந்த விண்கலம் தலைமை வடிவமைப்பாளர் செர்ஜி கோரோலேவின்(இவர் ஏவப்படுவதற்கு முன்பு இறந்துவிட்டார்). வழிகாட்டுதலில் ஓ கே பி - 1 என்று அழைக்கப்படும் வடிவமைப்பு பணியகத்தில் உருவாக்கப்பட்டது முதல் 11 நிலாப் பயணங்கள் பல்வேறு காரணங்களால் தோல்வியடைந்தன. அந்த நேரத்தில் OKB - 1 நிலாக்கான மனிதப் பயணத்தில் ஈடுபட்டு இருந்ததால் இந்தத் திட்டம் இலாவோச்கின் வடிவமைப்பு பணியகத்திற்கு மாற்றப்பட்டது. உலூனா 9 என்பது சோவியத் ஒன்றியத்தின் மென்மையான தரையிறக்கத்தின் பன்னிரண்டாவது முயற்சியாகும் - இது இலாவோச்கின் வடிவமைப்பு பணியகத்தால் கட்டப்பட்ட முதல் வெற்றிகரமான ஆழ்வெளி ஆய்வு ஆகும் , இது இறுதியில் கிட்டத்தட்ட அனைத்து சோவியத் (பின்னர் உருசிய) நிலா, கோளிடையேயான விண்கலத்தை வடிவமைத்து உருவாக்க வழிவகுத்தது.
ஏவுதலும் நிலாபெயரும் (புவிமைய) வட்டணையை அடைதலும்
தொகுஉலூனா 9 , கசகசுத்தான் சோவியத் சோசலிசக் குடியரசில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் உள்ள தளம் 31/6 இலிருந்து பறக்கும் மொல்னியா - எம் ஏவூர்தி வரிசை எண் 103 - 32 வழி ஏவப்பட்டது. ஏவுதல் 1966 ஜனவரி 31 அன்று 11:41:37 கிசநே மணிக்கு நடந்தது. நான்கு கட்ட ஏவூர்தியின் முதல் மூன்று நிலைகள் அறிவியல் கருவிகளையும் நான்காவது கட்டத்தையும் புவியின் தாழ் வட்டணையில் 168 கீழ் 219 கிலோமீட்டர்கள் (104 கீழ் 136 mi) உயரத்திலும் , 51.8 மைல் சாய்விலும் செலுத்தியது.[2] நான்காவது கட்டம் - பிளாக் - லா பின்னர் உலூனா 9 கலத்தை அதிக நீள்வட்ட புவி மைய வட்டணைக்கு அனுப்புவதற்கு முன்பு அதன் புவியண்மையைச் சரிசெய்து, சுமார் 500,000 கிலோமீட்டர் (310,000 மைல்) உள்ள புதிய புவிச் சேய்மைக்கு உயர்த்தியது.[2]
வெப்பக் கட்டுப்பாட்டிற்காக விண்கலம் நைட்ரஜன் தாரைகளைப் பயன்படுத்தி ஒரு மணித்துளிக்கு 0.7 சுற்று வேகத்தில் சுழன்றது. 19:29, பிப்ரவரி 1 அன்று கிசநே மணிக்கு 48 நொடி எரியூட்டலால் ஓர் இடைநிலைத் திருத்தம் நடந்தது , இதன் விளைவாக டெல்டா - வி வேகம் 71.2 மீட்டர் (234 அடி / நொ) அளவுக்குக் குறைந்தது.
உயரம் குறைத்தலும் தரையிறங்குதலும்
தொகுOblique LO3 view of Planitia Descensus
|
சந்திரனில் இருந்து 8,300 கிலோமீட்டர் (5,200 மைல்) உயரத்தில் விண்கலம் அதன் வேக ஒடுக்க ஏவூர்திகளை எரியூட்டுவது நோக்கமாக இருந்தது. எனவே, தரையிறங்குவதற்கான ஆயத்தமாக அதன் தற்சுழற்சி நிறுத்தப்பட்டது. இந்த தருணத்திலிருந்து விண்கலத்தின் திசப்பாங்கு ஒரு தன்னியக்க எந்திர அமைப்பைப் பயன்படுத்திச் சூரியனுக்கும் பூமிக்குமான திசைகளை அளவிடுவதன் மூலம் கட்டுபடுத்தப்பட்டது. நிலா மேற்பரப்பில் இருந்து 75 கிலோமீட்டர்கள் (47 mi) கிலோமீட்டர் (47 மைல்) உயரத்தில் வீவாணி உயரமானி பக்க தொகுதிகளை அகற்றியது. காற்றுப்பைகளின் உப்புதலும் வேக ஒடுக்க ஏவூர்திகளை எரியூட்டுதல். மேற்பரப்பில் இருந்து 250 மீட்டர்கள் (820 அடி) மீட்டர்கள் (820 ) தொலைவில் , முதன்மை பின்னோக்கிய ஏவூர்தி உந்துதல் நடவடிக்கையின் திட்டமிடப்பட்ட வேகத்தை அடையும்வரை முடுக்கத்தின் ஒருங்கிணைப்பியால் நிறுத்தப்பட்டு இருந்தது. நான்கு கிளர்த்துபொறிகள் விண்கலத்தின் வேகத்தை குறைக்க பயன்படுத்தப்பட்டன. நிலா மேற்பரப்பில் இருந்து சுமார் 5 மீட்டர் (16 ) உயரத்தில் ஒரு தொடுதல் உணரி தரையைத் தொட்டதும் பொறிகளை நிறுத்தியதும், தரையிறங்கும் பெட்டெகத்தை வெளியேற்றியது. இந்த விண்கலம் மணிக்கு 22 கிலோமீட்டர் (14 மைல்) வேகத்தில் தரையிறங்கியது.
இந்த விண்கலம் இரெய்னருக்கும் மாரியசுக்கும் மேற்கே உள்ள ஓசியானசு புரோசெல்லாரம், பள்ளத்தில் 1966, பிப்ரவை 3 அன்று 18:45:30 கிசநே மணியளவில்[3] பலமுறை மொத்தி, பிறகு ஓய்ந்தது. மொத்திய ஆயத் தொலைவுகள்: சுமார் 7.08 வ, 64.37′′மே ( பிற தகவல்களில் இருந்து 7.13 வ, 64.37மே )[4]
மேற்பரப்பு செயல்பாடுகள்
தொகுஓசியானசு புரோசெல்லாரத்தில் தரையிறங்கிய சுமார் 250 நொடிகளுக்குப் பிறகு , விண்கலத்தின் மேல் பாதியை உள்ளடக்கிய நான்கு இதழ்கள் மிகுந்த நிலைப்புடன் வெளிப்புறமாகத் திறக்கப்பட்டன. ஏழு மணி நேரத்திற்குப் பிறகு (சூரியன் 7 அடி உயரத்திற்கு ஏறவிட்டு) ஆய்கலம் ஒன்பது படங்களில் முதல் படத்தை (நிலா மேற்பரப்பின் ஐந்து இயற்கைக் காட்சி உட்பட) அனுப்பத் தொடங்கியது . மொத்தம் 8 மணி நேரம் 5 நிமிடங்களைக் கொண்ட ஏழு வானொலி அமர்வுகளும் , மூன்று தொடர் தொலைக்காட்சித் தொடர்களும் ஒளிபரப்பப்பட்டன. ஒளிப்படங்களைத் தொகுத்த பிறகு , புகைப்படங்கள் அருகிலுள்ள பாறைகளையும் 1.4 கிலோமீட்டர்கள் (0.87 mi).48 கிலோமீட்டர் (0.87 மைல்) தொலைவில் உள்ள அடிவானத்தின் காட்சிகளையும் உள்ளடக்கிய உடனடி நிலா மேற்பரப்பின் பரந்த காட்சியைக் கொடுத்தன.
உலூனா 9 இன் படங்கள் சோவியத் அதிகாரத்தால் உடனடியாக வெளியிடப்படவில்லை , ஆனால் இங்கிலாந்தில் உள்ள யோதிரெல் வங்கி ஆய்வகத்தின் அறிவியல் அறிஞர்கள் இந்த விண்கலத்தை கண்காணித்து வந்தனர் , பயன்படுத்தப்பட்ட குறிகை வடிவம் படங்களை அனுப்ப செய்தித்தாள்கள் பயன்படுத்தும் பன்னாட்டு அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட வானொலித் தொலைநகல் அமைப்பைப் போலவே இருப்பதை கவனித்தனர். டெய்லி எக்ஸ்பிரஸ் பொருத்தமான வான்காணக அலைவாங்கி வழியாக உலூனா 9 இலிருந்து படங்கள் கிறியிறக்கம் செய்து உலகளவில் வெளியிடப்பட்டன.[7] யோதிரெல் வங்கி ஆய்வகத்தால் படங்களைப் பெறுவதற்கு, விண்கலத்தின் வடிவமைப்பாளர்கள் வேண்டுமென்றே, தரவிணக்கக் கருவிகளைக் கொண்டு சோதனையை செய்ததாக பிபிசி ஊகித்தது.[8]
கதிர்வீச்சு கண்டறிதல் என்பது விண்கலத்தில் உள்ள ஒரே சிறப்பு அறிவியல் கருவியாகும் , இது ஒரு நாளைக்கு 30 மில்லிராட் (0,3 மில்லிகிரே) கதிர்வீச்சு அளவுவரை அளவிட்டது.[9] ஒரு விண்கலம் நிலாத் தூசியில் மூழ்காது என்றும் தரை ஒரு தரையிறங்கியைத் தாங்கும் என்றும் திட்டம் முடிவுசெய்தது. விண்கலத்துடனான கடைசித் தொடர்பு 1966 பிப்ரவரி 6 அன்று 22:55 கிசநே( GMT)மணி வரை இருந்தது.
படிமங்களும் காட்சிப் பொருட்கள்
தொகுவிரிவான உலூனா 9 சார்ந்த படிமங்கள் அண்டவியல் நினைவு அருங்காட்சியகத்திலும் சியோல்கோவ்சுகி அரசு அண்டவியல் வரலாற்று அருங்காட்சியகத்திலும் அண்டவியல், ஏவூர்தித் தொழில்நுட்ப அருங்காட்சியகத்திலும் வான், விண்வெளி அருங்காட்சியகத்திலும் இன்னும்பிற இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
-
Luna 9 mockup (1:1) at the Memorial Museum of Cosmonautics.
-
Luna-9 descent capsule at the Memorial Museum of Cosmonautics.
-
Luna 9 on display at the Tsiolkovsky State Museum of the History of Cosmonautics.
-
Luna-9 descent capsule at the Tsiolkovsky State Museum of the History of Cosmonautics.
-
Onboard container of the automatic control system "Luna-9", Museum of the History of Cosmonautics.
-
Luna 9 model at the Museum of Cosmonautics and Rocket Technology.
அஞ்சல் வில்லைகள்
தொகுஉலூனா 9 வெற்றிகரமாக தரையிறங்கியமை அஞ்சல் வில்லைகளில் நினைவுகூரப்பட்டது.
-
USSR stamp “Luna 9”–on the Moon! 3.2. 1966.
-
USSR stamp “Luna 9” Flight Scheme (Start 01.31, Soft Landing 02.03)
-
USSR stamp Arms of USSR and Pennant Sent to Moon by “Luna 9”.
-
Stamp of the Soviet Union, 1966
-
DDR stamp, 1966
-
USSR stamp, 1968
மேலும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Siddiqi 2018, ப. 55.
- ↑ 2.0 2.1 2.2 McDowell, Jonathan. "Satellite Catalog". Jonathan's Space Page. பார்க்கப்பட்ட நாள் 14 August 2013.
- ↑ 3.0 3.1 "NASA-NSSDC-Spacecraft-Details". NASA. பார்க்கப்பட்ட நாள் 4 April 2013.
- ↑ 4.0 4.1 "Table of Anthropogenic Impacts and Spacecraft on the Moon".
- ↑ "Chandrayaan-2 landing: 40% lunar missions in last 60 years failed, finds Nasa report".
- ↑ "Luna E-6". astronautix.com. Archived from the original on 15 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 November 2020.
- ↑ Daily Express front page Saturday February 5 1966
- ↑ BBC On This Day | 3 | 1966: Soviets land probe on Moon
- ↑ NSSDCA ID: 1966-006A-02
வெளி இணைப்புகள்
தொகு