உலூனா 23
உலூனா 23 (Luna 23 ) என்பது சோவியத் ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட லூனா திட்டத்தின் ஆளில்லா விண்வெளிப் பயணமாகும்.
உலூனா 23 படம், சந்திர மேற்பரப்பில் கிடைமட்டமாக காட்சியளிக்கிறது. A: ஏறும் நிலை, D: இறங்கும் நிலை. | |
திட்ட வகை | சந்திரன் மாதிரி |
---|---|
காஸ்பார் குறியீடு | 1974-084A |
சாட்காட் இல. | 7491 |
திட்டக் காலம் | 12 days |
விண்கலத்தின் பண்புகள் | |
செயற்கைக்கோள் பேருந்து | Ye-8-5M |
தயாரிப்பு | இலாவோச்கின் |
ஏவல் திணிவு | 5,795 kg (12,776 lb)[1] |
உலர் நிறை | 5,600 kg (12,300 lb) |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | 28 October 1974, 14:30:32[2] | UTC
ஏவுகலன் | Proton-K/D |
ஏவலிடம் | பைக்கனூர் 81/24 |
திட்ட முடிவு | |
கடைசித் தொடர்பு | 9 November 1974 |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
Reference system | நிலா வட்டணை |
வட்டவிலகல் | 0.00272 |
அண்மைselene | 94 km (58 mi) |
கவர்ச்சிselene | 104 km (65 mi) |
சாய்வு | 138 பாகைகள் |
சுற்றுக்காலம் | 119 நிமிடங்கள் |
Epoch | 2 நவம்பர் 1974 |
Invalid value for parameter "type" | |
Invalid parameter | 2 நவம்பர் 1974 |
Orbits | ~48 |
Invalid value for parameter "type" | |
Invalid parameter | 6 நவம்பர் 1974 |
"location" should not be set for flyby missions | 12°40′01″N 62°09′04″E / 12.6669°N 62.1511°E[3] |
கருவிகள் | |
Stereo photographic imaging system Improved Drill/Remote arm for sample collection Radiation detector Radio-altimeter |
உலூனா 23 என்பது சோவியத் நிலாத் தரையிறங்கிப் பயணமாகும் , இது நிலாப் பதக்கூறுகளைப் புவிக்குக் கொணரும் நோக்கில் இருந்தது. புரோட்டான் - கே / டி மூலம் நிலாவுக்கு ஏவப்பட்ட விண்கலம் அதன் பக்கத்தில் முன்கூட்டியே சாய்ந்து , மேற் கிறிசியத்தில் தரையிறங்கியபோது சிதைவுற்றது. பக்கூறு திரட்டும் எந்திரம் செயல்பட முடியவில்லை. மேலும் பத்க்கூறுகள் எதுவும் புவிக்குக் கொணரப்படவில்லை. தரையிறங்கி நிலாவில் இறங்கிய பின்னர் மூன்று நாட்களுக்குத் தகவல் பரிமாற்றத்தைத் தொடர்ந்தது. 1976 ஆம் ஆண்டில் உலூனா 24 பல நூறு மீட்டர் தொலைவில் தரையிறங்கி வெற்றிகரமாக பதக்கூறுகளைப் புவிக்குத்திருப்பி அனுப்பியது. 2010 KQ என்ற சிறுகோள் போன்ற பொருள் உலூனா 23 தொகுதியை ஏவிய பின்னர் பிரிந்த ஏவூர்தி என்று நம்பப்படுகிறது.[4]
உலூனா 23 என்பது நிலாவின் மேற்பரப்பின் ஆழமான அகட்டுப் பதக்கூறைக் கொணர வடிவமைக்கப்பட்ட முதல் நிலாப் பதக்கூறு மாதிரி திரும்பும் விண்கலமாகும் (எனவே குறியீடு யே - 8 - 5 இல் இருந்து யே - 8 முதல் 5 எம் வரை என மாற்றப்பட்டது ). உலூனா 16 மற்றும் உ லூனா 20 ஆகியவை 0.3 மீட்டர் ஆழத்திலிருந்து அதக்கூறுகளை திருப்பி அனுப்பியபோது , புதிய விண்கலம் 2.5 மீட்டர் வரை தோண்ட வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31 அன்று நடுவழித் திருத்தத்திற்குப் பிறகு உலூனா 23 1974,நவம்பர் 2, அன்று நிலாவைச் சுற்றி வந்தது. வட்டணை அளவுருக்கள் 104 × 94 கிலோமீட்டர் 138 ′ சாய்வில் இருந்தன. வட்டணையில் மேலும் பல மாற்றங்களைத் தொடர்ந்து , விண்கலம் நவம்பர் 6 அன்ரு நிலா மேற்பரப்பில் இறங்கி , மேற் கிறிசியத்தின் தெற்குப் பகுதியில் தரையிறங்கியது. தரையிறங்கிய ஆயத்தொலைவுகள் 13 வடக்கு அகலாங்கு 62 கிழக்கு நெட்டாங்கு ஆகும். தரையிறங்கும் போது தரையிறங்கியின் துளையிடும் கருவி சதைவடைந்தது , இது நிலா மண் எடுத்துக்கொண்டு புவிக்குத் திரும்பும் முதன்மைப் பணியை நிறைவேற்றுவதைத் தடுத்தது. நிலையான தரையிறங்கியுடன் வரையறுக்கப்பட்ட அறிவியல் ஆய்வு திட்டத்தை நடத்த அறிவியலாளர்கள் ஒரு தற்காலிக திட்டத்தை உருவாக்கினர். கட்டுப்பாட்டாளர்கள் 1974 நவம்பர் 9 அன்றுவரை விண்கலத்துடன் தகவல் தொடர்பைப் பெற்றனர்.
நாசா நிலா கண்காணிப்புச் சுற்றுகலன் எடுத்த உயர் பிரிதிறன் கொண்ட வட்டணை நிழற்படங்கள் மார்ச் 2012 இல் வெளியிடப்பட்டன. உலூனா 23 விண்கலம் நிலா மேற்பரப்பில் அதன் பக்கத்தில் கிடப்பதைக் காட்டியது. தரையிறங்கும் போது விண்கலம் பெயரளவு செங்குத்து மற்றும் / அல்லது கிடைமட்ட வேகங்களை விட கூடுதல் வேகத்தில் இருந்ததால் தரையிறங்க முன்கூட்டியே நகர்ந்தது.[5]
பண்பாட்டில்
தொகு2007 பயோவேர் மாசு எப்பெக்ட்டு எனும் காணொலி விளையாட்டு நிறுவனம் இந்த விண்கலத்தின் சிதைந்த எச்சங்களை புவி நிலாவின் அணுகக்கூடிய பகுதிகளில் காட்டியது. இவை தற்போக்குப் பரவல் பொருட்களுக்காக காப்பாற்றப்படலாம்.
மேலும் காண்க
தொகு- செயற்கை செயற்கைக்கோள்கள், விண்வெளி ஆய்வுகளின் காலநிரல்
- நிலாவில் உள்ள செயற்கை பொருட்களின் பட்டியல்
குறிப்புகள்
தொகு- ↑ Siddiqi, Asif (2018). Beyond Earth: A Chronicle of Deep Space Exploration, 1958–2016 (PDF) (second ed.). NASA History Program Office.
- ↑ Siddiqi, Asif (2018). Beyond Earth: A Chronicle of Deep Space Exploration, 1958–2016 (PDF) (second ed.). NASA History Program Office.
- ↑ Samuel Lawrence (2013-09-24). "LROC Coordinates of Robotic Spacecraft - 2013 Update". lroc.sese.asu.edu. Archived from the original on 2015-05-09. பார்க்கப்பட்ட நாள் 2015-06-09.
- ↑ Man-made object spotted with FTN பரணிடப்பட்டது 2012-06-30 at Archive.today, Edward Gomez, May 26, 2010
- ↑ Plescia, Jeff (March 16, 2012). "Mare Crisium: Failure then Success". LROC News System. http://lroc.sese.asu.edu/posts/461.