உலோகேநாத்து மிசுரா
உலோகேநாத்து மிசுரா (Lokenath Mishra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் (1905-1975) அரசியல்வாதியாவார். 1905 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று இயாம்சிவு மிசுரா பார்வதிதேவி தம்பதியருக்கு மகனாக இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இவர் ஒடிசாவிலிருந்து இந்திய அரசியலமைப்புச் சபையின் உறுப்பினராகவும் இருந்தார்.[1][2][3]
உலோகேநாத்து மிசுரா Lokenath Mishra | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1952–1957 | |
பின்னவர் | சிந்தாமணி பாணிக்ரகி |
தொகுதி | புரி நாடாளுமன்றத் தொகுதி, ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | புரி, ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 4 ஏப்ரல் 1905
இறப்பு | 1975 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பார்வதி தேவி |
மூலம்: [1] |
சுதந்திரத்திற்கு முன்பு ஒருமுறை ஒடிசா சட்டமன்றத்தில் உறுப்பினராகவும், சுதந்திரத்திற்குப் பிறகு ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். சுதந்திரத்திற்கு முன்பு 1946 ஆம் ஆண்டில் தெற்கு பூரி சதர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2ஆவது சுதந்திரத்திற்கு முந்தைய ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு, 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் செபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து 1ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலோகேநாத்து மிசுரா 1975 ஆம் ஆண்டில் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Parliament. Lok Sabha (1954). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 7251. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
- ↑ India. Parliament. House of the People; India. Parliament. Lok Sabha (1956). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 1847. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
- ↑ India. Parliament. Lok Sabha (1956). Lok Sabha Debates on the Report of the States Reorganisation Commission, 14th December to 23rd December, 1955. Lok Sabha Secretariat. p. 649. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.