உலோக்கு நாத்து சர்மா

இந்திய அரசியல்வாதி

உலோக்கு நாத்து சர்மா (Lok Nath Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிக்கிம் மாநிலத்தில் மது பிரசாத்து சர்ப்மா என்பவருக்கு மகனாகப் பிறந்தார். 1991 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு வரை படித்து முடித்தார். சிக்கிம் மாநில அரசியலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் கியால்சிங்கு-பார்னியாக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.எசு கோலே அமைச்சரவையில் உணவு பாதுகாப்பு அமைச்சர், விவசாயம், தோட்டக்கலை & பணப்பயிர்கள், கால்நடை பராமரிப்பு, கால்நடை மீன்பிடி மற்றும் கால்நடை சேவைகள், தகவல், மக்கள் தொடர்பு மற்றும் அச்சிடுதல் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார்.[1][2][3][4]

உலோக்கு நாத்து சர்மா
Lok Nath Sharma
சிக்கிம் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
முன்னையவர்சேர் பகதூர் சுபேதி
தொகுதிகியால்சிங்கு-பார்னியாக்கு சட்டமன்றத் தொகுதி
உணவு பாதுகாப்பு அமைச்சர், விவசாயம், தோட்டக்கலை & பணப்பயிர்கள், கால்நடை பராமரிப்பு, கால்நடை மீன்பிடி மற்றும் கால்நடை சேவைகள், தகவல், மக்கள் தொடர்பு மற்றும் அச்சிடுதல் துறை அமைச்சர்.
பதவியில்
2019
தொகுதிகியால்சிங்கு-பார்னியாக்கு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
உலோக்கு நாத்து சர்மா
அரசியல் கட்சிசிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
பிற அரசியல்
தொடர்புகள்
சிக்கிம் சனநாயக முன்னணி
வாழிடம்பெர்தாங், லோயர் பெர்னியாக்கு, மேற்கு சிக்கிம் மாவட்டம்
தொழில்பதவி துறந்த காவலர், சமூக சேவையாளர்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோக்கு_நாத்து_சர்மா&oldid=3853156" இலிருந்து மீள்விக்கப்பட்டது