உல்ஃப் எண்
உல்ஃப் எண் (Wolf number) என்பது சூரியனின் மேற்பரப்பில் காணப்படும் சூரியப் புள்ளிகள் மற்றும் சூரியப் புள்ளிகளின் தொகுதிகள் தொடர்பான எண்ணிக்கை அளவாகும். இதை அனைத்துலக சூரியப்புள்ளி எண், ஒப்பீட்டு சூரியப்புள்ளி எண் அல்லது சூரிச் எண் என்றும் அழைக்கிறார்கள்.
1848 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரைச் சார்ந்த யோகான் ருடால்ஃப் உல்ஃபு இக்கணக்கிடும் முறையை கண்டறிந்த காரணத்தால் இவ்வெண்ணிக்கை உல்ஃப் எண் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது[1]. சூரியனின் மேற்பரப்பில் காணப்படும் புள்ளிகள் மற்றும் புள்ளிகள் தொகுதி இரண்டையும் இணைத்து கணக்கிடும் முறை பயன்படுத்துவதன் காரணம் யாதெனில், கணக்கெடுப்பில் விடுபட்டுப் போகும் மிகச்சிறிய புள்ளிகளின் எண்ணிக்கையை ஈடு செய்ய வேண்டும் என்பதற்காகவேயாகும்.
இந்த எண்ணிக்கையை சேகரிக்கப்பதையும், அட்டவணைப் படுத்துவதையும் 150 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சூரியப்புள்ளி நடவடிக்கையானது ஒரு சுழற்சி முறையின் அடிப்படையில் நடைபெறுகிறது என்பதையும், அதிகபட்சமாக அச்சுழற்சி ஒவ்வொரு 9.5 முதல் 11 ஆண்டுகள் கால இடைவெளியில் நிகழ்கின்றன என்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். (குறிப்பு: சூரிய நிகழ்வுகள் தரவு மையத்தின்SIDC 300 ஆண்டுகால தரவுகள் மற்றும் விரைவு ஃபூரியே உருமாற்றம் அடிப்படையிலான தரவுகள், இச்சுழற்சியின் அதிகபட்ச கால இடைவெளி 10.4883 எனக் கூறுகின்றன)[2]. 1843 ஆம் ஆண்டில் இச்சுழற்சி சாமுவேல் எயின்றிச் சிகாவ்பே என்பவரால் அறியப்பட்டது.
ஒப்பீட்டு சூரியப்புள்ளி எண்ணைக் ( ) கணக்கிட பின்கண்ட சூத்திரம் பயன்படுகிறது. (சூரியப் புள்ளி நடவடிக்கையின் தினசரி அட்டவணையில் இருந்து திரட்டப்பட்டது)
இங்கு,
- என்பது தனித்தனியான புள்ளிகளின் எண்ணிக்கை,
- என்பது தொகுதிகளாக இருக்கும் புள்ளிகளின் எண்ணிக்கை, மற்றும்
- என்பது அமைவிடம் மற்றும் பயன்படுத்தப்படும் கருவிக்கேற்ப மாறுபடும் ஒரு காரணி. இது, நோக்கீட்டுக் காரணி அல்லது தன்னிலை குறுக்கக் கெழு K என்றும் கருதப்படுகிறது.[3]
2015 சூலை முதல் தேதி முதல் திருத்தி மேம்படுத்தப்பட்ட உல்ஃப் எண்களின் பட்டியல் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Sun - History". 2001-11-25. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
- ↑ SIDC, RWC Belgium, World Data Center for the Sunspot Index, Royal Observatory of Belgium, 'year(s)-of-data'.
- ↑ "personal reduction coefficient K" (PDF). Archived from the original (PDF) on 2011-07-27. பார்க்கப்பட்ட நாள் 2016-01-26.
- ↑ Switching to the new Sunspot Number (1 July 2015)
புற இணைப்புகள்
தொகு- The Exploratorium's Guide to Sunspots
- Solar Influences Data Analysis Center (SIDC) for the Sunspot Index பரணிடப்பட்டது 2017-08-03 at the வந்தவழி இயந்திரம்
- NASA Solar Physics Sunspot Cycle page and Table of Sunspot Numbers (txt) by month since 1749 CE
- Clement Juglar and the transition from crises theory to business cycle theories