உல்பென்சன் பவுட்டர் வினை
உல்பென்சன் பவுட்டர் வினை ( Wolffenstein–Böters reaction ) என்பது பென்சீனை நீர்த்த நைட்ரிக் அமிலம் மற்றும் பாதரச (II) நைட்ரேட்டு சேர்த்து பிக்ரிக் அமிலமாக மாற்றும் கரிம வேதி வினையாகும்[1][2][3]
இவ்வினையின் தொடர்ச்சியான ஆய்வுகளின் படி பாதரச நைட்ரேட்டு பென்சீனை முதலில் அதனோடு தொடர்புடைய நைதரசோச் சேர்மமாகவும் பின்னர் டையசோனியம் உப்பு வழியாக பீனாலாகவும் மாற்றுகிறது. நைட்ரைட்டின் இருப்பு இவ்வினைக்கு அவசியமாக உள்ளது. பிக்ரிக் அமிலம் உருவாதலைத் தடுக்கும் யூரியாவின் செயல்பாட்டைக் குறைக்க கலவையுடன் நைட்ரசு அமிலம் சேர்க்கப்படுகிறது. இதன் பின்னர் வழக்கமான அரோமாட்டிக் நைட்ரசனேற்ற வினை தொடர்கிறது[4][5]
இவ்வினையின் அடிப்படைக் கருத்துருவுடன் தொடர்புடைய அதே கருத்து சாயத் தொழிலின் கவனத்தை ஈர்த்தது. பான் – சிகிமிட் வினையில் ஐதராக்சி ஆண்ட்ராகுயினோனுடன் கந்தக அமிலம் அல்லது காரீயம் அல்லது செலினியம் சேர்த்து பல ஐதராக்சிலேற்ற ஆண்ட்ரா குயினோன் உருவாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Wolffenstein and Boeters, Chem. Abs., I, 489, 1861 (1908); 4, 369 (1910);
- ↑ Richard Wolffenstein, O. Böters (1913). "Über die katalytische Wirkung des Quecksilbers bei Nitrierungen". Berichte der deutschen chemischen Gesellschaft 46 (1): 586–589. doi:10.1002/cber.19130460177.
- ↑ R. Wolffenstein, W. Paar (1913). "Über Nitrierung der Benzoesäure in Gegenwart von Quecksilber". Berichte der deutschen chemischen Gesellschaft 46 (1): 589–599. doi:10.1002/cber.19130460178.
- ↑ The Mechanism of the Oxynitration of Benzene F. H. Westheimer, Edward Segel, and Richard Schramm J. Am. Chem. Soc.; 1947; 69(4) pp 773 - 785; எஆசு:10.1021/ja01196a011
- ↑ The Oxynitration of Benzene. I. Studies Relating to the Reaction MechanismsMarvin Carmack, Manuel M. Baizer, G. Richard Handrick, L. W. Kissinger, and Edward H. Specht J. Am. Chem. Soc.; 1947; 69(4) pp 785 - 790; எஆசு:10.1021/ja01196a012
வெளிப்புற இணைப்புகள்
தொகு- The Bohn–Schmidt reaction பரணிடப்பட்டது 2007-05-07 at the வந்தவழி இயந்திரம் @ Institute of Chemistry, Skopje, Macedonia