உள்ளுறைக் காலம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உள்ளுறைக் காலம் அல்லது மறை பொழுது (latent period) என்பது கதிர்வீச்சிற்கு ஆட்பட்டதிலிருந்து விளைவுகள் தோன்றும் நேரம் வரையிலுள்ள கால இடைவெளி ஆகும்.
கதிரியல் துறையில் பணியில் இருப்பவர்களும் கதிர் மருத்துவத்திற்கு ஆட்பட்டவர்களும் அயனியாக்கும் கதிர்வீச்சிற்கும் அதன் தீயவிளைவுகளுக்கும் ஆளாகின்றனர். கதிர் ஏற்பளவினையும் உடலின் எப்பகுதியில் அக்கதிர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதனையும் பொறுத்து விளைவுகள் அமையும். மேலும் விளைவுகள் விரைந்தோ கலம் தாழ்த்தியோ தோன்றலாம். இம்மாதிரியான ஒருநிலை விபத்துக் காலங்களிலும் ஏற்படலாம். உள்ளுறைக் காலம் சில மணி நேரத்திலிருந்து பல ஆண்டுகள் வரை இருக்கலாம்.