உள்-பிணைவு படிவாக்கம்

உள்- பிணைவு படிவாக்கம் (infusion cloning) ஒரு எளிமையான, விரைவான பக்டிரியல் படிவாக்கம் (bacterial cloning) செய்யும் முறையாகும். இம்முறையில் நாம் படிவாக்கம் செய்ய விரும்பும் டி.என்.ஏ பகுதிகளை நேரடியாக நாம் படிவாக்கம் செய்ய விரும்பும் பரப்பிகளில் (Plasmid Vector) இசைவாக்கலாம். மேலும் நாம் விரும்பும் நிலைகளில் அதாவது நேர் மற்றும் எதிர் அல்லது தலைகீழ் நிலைகளில் (sense or antisense orientation) படிவாக்கம் செய்யலாம். இதனால் காலவிரயம், பணிச்சுமை குறைவாகும்.

உள்-பிணைவு படிவாக்கத்தை விளக்கும் படம். இம் முறையில் பயன்படுத்தப்படும் இணைவு நொதிக்கு ஒத்தெதிர் இணைவு மாற்றம் செய்யும் வல்லமை உள்ளதால், எளிதாக மற்றும் விரைவாக படிவாக்கம் இயலும்.

இந் நுட்பத்தில் பயன்படும் இணைவு நொதிக்கு (Ligase) வெட்டி இணைக்கும் தன்மை கொண்டு இருக்கும்.இந் நொதியால் ஒத்தெதிர் இணைவு மாற்றம் (homologus recombination) செய்யும் வல்லமை கொண்டவை.அதனால் இம்முறையில் படிவாக்கம் செய்ய விரும்பும் டி.என்.ஏ பகுதிகளை பாலிமரசு தொடர் வினைக்காக நாம் ஆக்கும் முன்முனையங்களில் (Primer) 15 அல்லது 18 நாம் படிவாக்கம் செய்யவிரும்பும் பரப்பிகளின் வரிசைகளை (sequence) கூடுதலாக இடவேண்டும். மேலும் ஒத்தெதிர் இணைவு மாற்றம் நடைபெறுவதற்கு ஏதுவாக பரப்பியில் உள்ள பல் படிவாக்க இடத்தில் (multiple cloning site) உள்ள கட்டுள்ள நொதிகளில் (restriction enzyme) ஒன்றை தேர்ந்தெடுத்து அவைகளை முன்முனையங்களில் (primer) கூடுதலாக இட வேண்டும். பின் பரப்பியேய், முன்முனையங்களில் இட்ட கட்டுள்ள நொதியால் செரிமானம் (digestion) செய்யப்பட்டு , பி.சி.ஆர். விளை பொருட்களை கலந்து நாம் படிவாக்கம் செய்யலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்-பிணைவு_படிவாக்கம்&oldid=2742792" இலிருந்து மீள்விக்கப்பட்டது