உவமப்போலி
தொல்காப்பியம் உவமம், உவமப்போலி என்பனவற்றைச் சுட்டுகிறது. உவமையை நான்கு வகை என்கிறது. [1] உவமப் போலியை ஐந்து வகை என்கிறது. [2] [3] இவற்றை இளம்பூரணர் என்னும் உரையாசிரியரின் வழி நிரல் செய்து விளங்கிக்கொள்ளலாம். உவமப்போலி ஐந்துக்கு [[இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை நிரலுக்குப் பின் காணலாம்.
நிரல்
தொகுஉவமம் | உவமப்போலி |
---|---|
வினை, [4] பயன், [5] மெய், [6] உரு [7] |
வினை, பயன், உறுப்பு, உரு, பிறப்பு [8] |
இளம்பூரணர் எடுத்துக்காட்டு
தொகு1
இதற்கு உவமை இல்லை எனல்
நின்னோர் அன்னர் பிறர் இவர் இன்மையின்
மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும [9]
2
இதற்கு இது மட்டுமே உவமை எனல்
மன் உயிர் முதல்வனை ஆதலின்
நின்னோர் அணையை நின் புகழோடு பொலிந்தே
3
பல பொருள்களில் உள்ள உறுப்புகளைத் தெரிந்தெடுது ஒன்றாகச் சேர்த்தால் இதற்கு உவமை ஆகும் - எனல்
நல்லார்கள் நல்ல உறுப்பாயின தாங்கள் தாங்கள்
எல்லாம் உடன் ஆனது என்று அன்ன இயைந்த ஈட்டால்
சொல்லால் முகம் கண் முலை தோள் இடை அல்குல் கை கால்
பல் வாய் குழல் என்று இவற்றால் படிச் சந்தம் ஆனாள்
4
பல இடங்களிலும் உளதாகிய கவின் ஓரிடத்து வரின் இதற்கு உவமை ஆம் - எனல்
நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல்
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை [10]
5
கூடாப் பொருளொடு உவமித்து வருவன
வாதாது அமைவானோ வாதாது அமைவானோ
வாதாது அமைகுவன் அல்லன் மலைநாடன்
ஈரத்தில் இன்னவை தோன்றின் நிழல் கயத்து
நீருள் குவளை வெந்து அற்று [11]
அடிக்குறிப்பு
தொகு- ↑ வினை, பயன், மெய், உரு, என்ற நான்கே
வகை பெற வந்த உவமத் தோற்றம். (தொல்காப்பியம் 3-272) - ↑ உவமப் போலி ஐந்து' என மொழிப (தொல்காப்பியமு 3-295)
- ↑ தவல் அருஞ் சிறப்பின் அத் தன்மை நாடின்,
வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்
பிறப்பினும் வரூஉம் திறத்த' என்ப . (தொல்காப்பியம் 3-296) - ↑ புலி போலப் பாய்ந்தான்
- ↑ மழை போல் வழங்கினான்
- ↑ பவளம் போன்ற வாய்
- ↑ துடி போலும் இடை
- ↑ நினக்குவமையில்லை என்னும்வழிச் செயலானாதல். பயனானாதல். உறுப்பானாதல், உருவானாதல், பிறப்பானாதல் ஒப்பாரில்லையெனல் வேண்டும் என்பது கருத்து. பிறவு மன்ன - இளம்பூரணர் விளக்கம்
- ↑ புறநானூறு 373
- ↑ பதிற்றுப்பத்து 14
- ↑ கலித்தொகை 41