உவர் நிலத்தில் மீன் வளர்ப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உவர் நீர் மீன் வளர்ப்பு என்பது உவர் நீரில் மீன் வளர்ப்பது ஆகும். உவர் நீர் மீன் வளத்தில் உப்புத்தன்மையை தவிர நீர், மண்ணின் தன்மைகள் நன்னீர் மீன் வளத்தைப் போன்றே இருக்கும். உப்புத்தன்மை என்பது நீர் அளவில் கரையாமல் உள்ள உப்பாகும். இது கிராம் கிலோ கிராம் நீரினால் குறிப்பிடப்படும். பொதுவாக உவர்குளத்தில் 0.5மூ - 30மூ உப்புத்தன்மை இருக்கும். இந்த உப்புத்தன்மை குளத்தில் இருந்து கடல் தொலைவைப் பொறுத்தும் பருவகாலத்திற்குத் தகுந்தவாறு இருக்கும்.
உப்புத்தன்மை ஏற்றவாறு தாவர மற்றும் விலங்கினங்கள் மாறுபடும். வேதிவினையியல் முறையினால் உப்புத்தன்மையில் உள்ள உணவை மாற்றி மீன்களுக்கு ஊட்டச்சத்தாக அமைக்கலாம். பெரும்பாலும் உவர் நீர் மீன் இனங்கள் இயற்கையிலே அதிக உப்பைத் தாங்கக் கூடிய திறன் உள்ளவை. பென்னேயிஸ் மோனோடான் வகை இறால் அதிகமாக உவர் நீரில் வளரக் கூடியது. உலகளாவிய சந்தைகளில் முதன்மை வாய்ந்தது. இது அதிக உப்பைத் தாங்கக் கூடியதாக இருந்தாலும் அதிகமாக இறப்பும் வளர்ச்சி விகிதமும் குறைவாக இருக்கும். அதாவது உப்புத்தன்மை 10மூ குறைவாக இருந்தால் 15 - 30மூ உள்ள உப்புத்தன்மையில் பென்னேயிஸ் மோனோடான் நன்றாக வளரும். இது குறைவான உப்புத்தன்மையிலும் வளரும். ஆனால் நன்னீரில் 30 நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது.
நன்னீரை விட உவர் நீரில்தான் அதிக மீன்களை வளர்க்கின்றனர். ஆனால் உவர் நீர் வளர்ப்பைவிட நன்னீர் வளர்ப்புதான் அதிகம். இதற்கு முதன்மையான காரணம், நன்னீரில் மீனுக்கு தேவையான உணவு, உயிரினங்கள் இல்லாததே ஆகும். ஆதலால் நிறைய உரங்கள் மற்றும் எருக்கள் இட வேண்டும். உவர் நீர், ஊனுண்ணிகளற்ற மீன்களுக்கும் இறால்களுக்கும் கடலடி பாசி அடிப்படை உணவாகும். உவர் நீர் உரமிடுதல் முற்றிலும் மற்ற மீன் வளத்தை விட வேறுபட்டது. உவர் நீர் மீன் வளத்தில் நீர் உப்புத்தன்மை நிலைக்கேற்ப ஊட்டச்சத்து கிடைக்கும்.[1]
உவர்நில மீன் வளர்ப்பு நீர்வாழ் விலங்குகளையும்(மீன்வகைகளையும்) பெரிதும் கடற்கரை சாராத உள்நாட்டுப் பகுதியின் உவர்நிலைக் கீழ்நீர் வள இருப்பிடங்களில் வளர்த்தலாகும். இது நீரடி நீரவளத்தின் உவர்மையை நீக்கி நன்னீரை வழங்க வழிசெய்கிறது. இதனால் அருகில் உள்ள நிலங்களை வேளாண்மைக்கு பயன்படுத்த முடிகிறது. எனவே இது ஆத்திரேலியா போன்ற பெரிய உவர்நீர் வளம் நிறைந்த பகுதிகளில் மட்டுமே வணிகவியலாக பயன்தருகிறது.
தகுந்த உயிரினங்கள்
தொகுமீன்கள்
தொகு- வானவில் டிரவுட்: இது கரடான, வேகமான வளர்ச்சியுள்ளது; இதற்கு நீரின் வெப்பநிலை குறைவாக அமையவேண்டும்; மழைக்கால வளர்ப்புக்கு ஏற்றது.
- பழுப்பு டிரவுட்: இது கரடான, வேகமான வளர்ச்சியுள்ளது; இதற்கு நீரின் வெப்பநிலை குறைவாக அமையவேண்டும்; மழைக்கால வளர்ப்புக்கு ஏற்றது.
- பாரமுண்டி: இதற்கு உயர் வெப்பநிலை அமையவேண்டும்; பேரளவு உவர்நிலை நெடுக்கங்களில் வாழவல்லது.
- வெள்ளி பெர்ச்: இதற்கு வெதமான நீர் தேவை; விரிநிலை, செறிநிலை அமைப்புகள் இரண்டுக்கும் ஏற்றது
- சுனாப்பர்
பிற உயிரினங்கள்
தொகு- ஓட்டுடலிகள்: உவரிகள், கல் இறால், இறால் ஆகியவை நீரை தூய்மையாக்கும் திற்ரத்தைப் பெற்றிருப்பதால் இவற்றைக் கழிவுநீர் பதப்படுத்தல் திட்டத்துக்குப் பயன்படுத்தலாம்.
- மெல்லுடலிகள்: சிப்பிகள்
- பாசிகள்: ஒருகலப் பாசிகள், கடற்பூண்டுகள் வளர்த்து, மருத்தாக வேதிமங்கள் உள்ளிட்டளுயர்மதிப்பு விளைபொருட்களைப் பெறலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ மீன் மற்றும் கடல்வள கையேடு – 2006
வெளி இணைப்புகள்
தொகு- "Government of Western Australia, Department of Agriculture, Farmnote No. 12/2003" (PDF). Archived from the original (PDF) on 2005-07-25. பார்க்கப்பட்ட நாள் 2007-01-24.
- ""Inland saline research in WA" in Austasia Aquaculture (magazine) Aug/Sep 2003" (PDF). Archived from the original (PDF) on 2005-07-25. பார்க்கப்பட்ட நாள் 2007-01-24.
- "'Aquaculture SA' Fact Sheet - Potential of Inland Saline Aquaculture" (PDF). Archived from the original (PDF) on 2006-12-16. பார்க்கப்பட்ட நாள் 2007-01-24.
- "SIFTS @ New Inventors (TV program)". Australian Broadcasting Corporation.
- "Waikerie Inland Saline Aquaculture Centre". Archived from the original on 2006-10-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-17.