உஷா சர்மா (Usha Sharma) என்பவர் 2017 முதல் 2020 வரை இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக பணியாற்றியவர் ஆவார். இவர் 1985-தொகுதி ராஜஸ்தான் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் 22 ஜூலை 2017 முதல் இப்பணியில் நியமிக்கப்பட்டார்.[1] இவரது ஓராண்டு பணிக்குள் இந்நிறுவனத்திற்கு ஒரு புதிய தலைமை அலுவலகக் கட்டிடத்தினை (தாரோகர் பவன்) ஜூலை 2018 12 பிரதமர் நரேந்திர மோதியால் திறந்துவைக்கப்பட்ட பெருமையுடையவர்.[2] ஒடிசாவில் உள்ள ஜெகநாதர் கோவிலின் நாதமண்டபத்தின் மறுசீரமைப்பு மற்றும் கொனார்க்கில் உள்ள சூரியன் கோயிலின் ஜகமோகனின் பாதுகாப்பு இவரது காலத்தில் தொடங்கப்பட்ட இரண்டு முக்கிய பணிகளாகும்.[3] இவரைத் தொடர்ந்து 2020ல் வி. வித்யாவதி இப்பதவியில் நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

முன்னர்
ராகேஷ் திவாரி
தலைமை இயக்குநர்
இந்திய தொல்லியல் துறை

2017-2020
பின்னர்
வி. வித்யாவதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_சர்மா&oldid=3350036" இலிருந்து மீள்விக்கப்பட்டது