கொனார்க் (Konark) (ஒடியா: କୋଣାର୍କ), இந்திய மாநிலமான ஒடிசாவின் புரி மாவட்டத்தில் அமைந்த சிறு ஊர் ஆகும். உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான கொனார்க் சூரியக் கோயில் [1] இவ்வூரில் அமைந்துள்ளது. இவ்வூரில் அழகு சிந்தும் சந்திரபாகா கடற்கரை உள்ளது.

கொனார்க்
କୋଣାର୍କ
कोणार्क
Konārka, Konârak
ஊர்
கொனர்க் சூரியக் கோயில்
கொனர்க் சூரியக் கோயில்
கொனார்க் is located in ஒடிசா
கொனார்க்
கொனார்க்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கொனார்க்கின் அமைவிடம்
கொனார்க் is located in இந்தியா
கொனார்க்
கொனார்க்
கொனார்க் (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°53′27″N 86°06′01″E / 19.89083°N 86.10028°E / 19.89083; 86.10028
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்புரி
ஏற்றம்
2 m (7 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்15,015
மொழிகள்
 • அலுவல்ஒடியா
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
752111
வாகனப் பதிவுOD-13
இணையதளம்http://konark.nic.in

அமைவிடம்

தொகு

ஒடிசா மாநிலத் தலைநகரம் புவனேசுவரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும், புரி நகரத்திலிருந்து 35 தொலைவிலும், வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்த ஊராகும். [2][3]

திருவிழா

தொகு

இங்குள்ள சூரியக் கோயிலில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் கொனார்க் நாட்டியத் திருவிழா நடைபெறுகிறது. [4]

பெயர்க் காரணம்

தொகு

சமஸ்கிருத மொழியில் உள்ள கொனர்கா (கொனா + அர்கா) எனும் இரண்டு சொல்லில், கொனா என்பதற்கு கோணம் என்றும், அர்கா என்பதற்கு சூரியன் என்றும் பொருளாகும். [5]

கொனார்க் சூரியக் கோயில்

தொகு
 
கொனார்க் சூரியக் கோயில்

சூரியதேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில், கி பி 13-ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்கர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. இக்கோயில் கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.[6]

மக்கள் தொகையில்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொனார்க் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 16,779 ஆகும். அதில் ஆண்கள் 8,654 ஆகவும்; பெண்கள் 8,125 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 1750 (10.43%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.97% ஆக உள்ளது. அதில் ஆண்களின் 79.96% எழுத்தறிவு ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 71.71%. ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 939 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 96.05% ஆகவும்; இசுலாமியர்கள் 0.38% ஆகவும்; சீக்கியர்கள் 0.02% ஆகவும்; பௌத்தர்கள் 0.01% ஆகவும்; சமணர்கள் 0.01%ஆகவும், கிறித்தவர்கள் 3.25% ஆகவும்; சமயம் குறிப்பிடாதவர்கள் 0.28%ஆகவும் உள்ளனர். [7]

சுற்றுலாத் தலம்

தொகு

இந்தியப் பண்பாட்டுச் சுற்றுலாத் தலமாக கொனர்க் சூரியக் கோயில் விளங்குகிறது. [8] அந்தி சாயும் வேளையில் கொனார்க் சூரியக் கோயிலில் ஒலி-ஒளி காட்சி காட்டப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. UNESCO (1984). "World Heritage List: Sun Temple, Konârak". Archived from the original on 3 April 2015.
  2. "Konark, Official Website (Approach)". Archived from the original on 2013-05-12. பார்க்கப்பட்ட நாள் 2017-05-30.
  3. http://www.konark.org/how-to-reach-konark.html
  4. "25th Konark Dance & Music festival" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-05-30.
  5. Konârka is a combination of two words, kona (corner) and arka (Sun). UNESCO 1984
  6. "Konark Sun Temple". Archived from the original on 2017-06-01. பார்க்கப்பட்ட நாள் 2017-05-30.
  7. Konark Population Census 2011
  8. http://www.konark.org/how-to-reach-konark.html

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Konark
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொனார்க்&oldid=3586769" இலிருந்து மீள்விக்கப்பட்டது