உஷா மீனா (Usha Meena, பிறப்பு: சூலை 1, 1949) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியத் தேசியக் காங்கிரசு வேட்பாளராக இந்திய மாநிலமான இராசத்தானில் உள்ள சவாய் மாதோபூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2]

உஷா மீனா
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1998–1999
தொகுதிசவாய் மாதோபூர்
பதவியில்
1996–1998
முன்னையவர்குஞ்சி லால் மீனா
தொகுதிசவாய் மாதோபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு( 1949-07-01)1 சூலை 1949
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்தரம் சிங் மீனா
பெற்றோர்
  • சுட்டான் லால் மீனா (தந்தை)
  • தாபா தேவி மீனா (தாய்)
தொழில்விவசாயி, அரசியல்வாதி, சமூகசேவகர்

இளமை

தொகு

உஷா மீனா 1 சூலை 1949 அன்று இராசத்தானின் அல்வாரில் பிறந்தார். இவர் மறைந்த சுட்டன் லால் மீனாவின் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரசு) மகள் ஆவார். இவர் தரம் சிங் மீனாவை (இஆப) மணந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.[1]

ஜெய்ப்பூரில் உள்ள இராசத்தான் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பை முடித்தார் உஷா. 1996-இல் 11வது மக்களவைக்கு முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997 வரை இவர் தொழில் குழு உறுப்பினராகவும் நீர்வள அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.

1998-இல், இவர் 12வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 12ஆவது மக்களவையில் விவசாயக் குழு உறுப்பினராகவும், நீர்வள அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார்.

1998-99 காலகட்டத்தில் இந்தி சிக்சா சமிதியின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 24 February 2014.
  2. "This is a wonderful story of a village in Rajasthan". https://www.jagran.com/rajasthan/jaipur-this-is-a-village-of-rajasthan-16430060.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_மீனா&oldid=3891393" இலிருந்து மீள்விக்கப்பட்டது