அல்வார்
அல்வார் அல்லது அல்வர் (ஆங்கிலம்: Alwar, ராஜஸ்தானி: अलवर) நகரம் வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. இந்நகரம் அல்வார் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகரமானது இந்தியத் தலைநகர் டெல்லியிலிருந்து 160 கிலோமீட்டர்கள் தொலைவிலும் ஜெய்ப்பூரிலிருந்து 150 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்தியாவின் அதிகபட்ச வெப்பநிலையான 50.6 °செல்ஸியஸ் 1956 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தியதி இந்நகரில் பதிவானது.[1] இந்நகரத்தின் அமைவிடம் 27°34′N 76°36′E / 27.57°N 76.6°E [2]ஆகும். இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 271 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
அல்வார் | |
---|---|
நாடு | இந்தியா |
District | அல்வார் மாவட்டம் |
ஏற்றம் | 268 m (879 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 10,15,310 |
• பெருநகர் | 10,41,383 |
இணையதளம் | http://alwar.nic.in/ |
மேற்கோள்கள்
தொகு- ↑ Extreme Weather Events பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் India Meteorological Department
- ↑ Falling Rain Genomics, Inc – Alwar. Fallingrain.com. Retrieved on 2012-07-06.