உஸ்திகா தீவு
உஸ்திகா தீவு (Ustica) என்பது மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த திர்ரேனியக் கடலில் அமைந்திருக்கும் ஓர் எரிமலை தீவு ஆகும். ஏறத்தாழ 8 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இத்தீவு மையத்தில் 239 மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது. இத்ததீவின் கடற்பகுதி ஓரமாக எண்ணற்ற குகைகள் காணப்படுகின்றன. தொடக்க காலத்திலும், நடுக்காலத்திலும் இத்தீவில் சரசென் இன மக்கள் குடியிருந்தனர். கடற்கொள்ளையரின் தொடர்ச்சியான தாக்குதலால் இத்தீவிலிருந்து வெளியேறிய மக்கள் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இங்கு குடியேறவில்லை. இத்தீவில் திராட்சை, தானியங்கள், பழங்கள் ஆகியவை பயிரிடப்படுகின்றன. மீன்பிடித்தல் முக்கியமான தொழிலாகக் கருதப்படுகின்றது. இத்தீவின் மக்கள் வடகிழக்கு கடற்பகுதியில் அமைந்துள்ள உஸ்திகா துறைமுகத்தில் வாழ்கின்றனர். இதன் நிர்வாகம் பலெர்மோ மாநிலக்கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது. இத்தீவிலிருந்து பாலேர்மோவுக்கு கப்பல் போக்குவரத்து உண்டு. இத்தீவு 38 டிகிரி 42' வடக்கு அகலாங்கிலும் 13.டிகிரி 01' கிழக்கு நெட்லாங்கிலும் அமைந்துள்ளது.[1]
Ustica | |
---|---|
Comune di Ustica | |
நாடு | இத்தாலி |
மண்டலம் | சிசிலி |
அரசு | |
• நகரத் தந்தை | Aldo Messina |
பரப்பளவு | |
• மொத்தம் | 8.24 km2 (3.18 sq mi) |
ஏற்றம் | 49 m (161 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,330 |
இனம் | Usticesi or Usticani |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 90010 |
Dialing code | 091 |
மேற்கோள்கள்
தொகு- ↑ அறிவியல் களஞ்சியம் தொகுதி - 5, பக்கம் - 791 - 2006. முதன்மைப் பதிப்பாசிரியர் - பேராசிரியர் கே.கே. அருணாசலம்