ஊகான் தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம்

ஊகான் தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம், சீன அறிவியல் கல்வியகம் (The Wuhan Institute of Virology, Chinese Academy of Sciences) (WIV:சீன மொழி: 中国科学院武汉病毒研究所; பின்யின்: Zhōngguó Kēxuéyuàn Wǔhàn Bìngdú Yánjiūsuǒ) என்பது தீநுண்மிகள் குறித்த ஒரு ஆராய்ச்சி கல்வி நிறுவனமாகும். இந்நிறுவனம் சீன அறிவியல் கல்வியகத்தால் (the Chinese Academy of Sciences) (CAS) நிர்வாகிக்கப்படுகிறது.

ஊகான் தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம்
中国科学院武汉病毒研究所
சுருக்கம்WIV (டபுல்யூ.ஐ.வி)
முன்னோர்
  • ஊகான் நுண்ணுயரியல் ஆய்வகம்
  • தென் சீனா நுண்ணுயிரியல் ஆய்வு நிறுவனம்
  • ஊகான் நுண்ணுயிரியல் ஆய்வு நிறுவனம்
  • ஊபேய் மாகாண நுண்ணுயிரியல் ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1956
நிறுவனர்சென் ஹுவாகுய், காவ் ஷாங்கின்
தலைமையகம்ஜியாங்சியா மாவட்டம், ஊகான், ஊபேய், சீனா
ஆள்கூறுகள்30°22′26.3″N 114°16′05.0″E / 30.373972°N 114.268056°E / 30.373972; 114.268056
பொது-இயக்குனர்
வாங் யான்யி
கட்சி குழு செயலாளர்
சியாவோ ஜெங் ஃபு[1]
துணை பொது-இயக்குனர்
காங் பெங்க், குவான் உக்சியாங், சியாவோ ஜெங்ஃபு
தாய் அமைப்பு
சீன அறிவியல் கல்வியகம்
வலைத்தளம்whiov.cas.cn

இது சீனாவில் ஊபேய் மாகாணத்தில், ஜியாங்சியா மாவட்ட தலைநகரான ஊகானில் அமைந்துள்ளது. இது 2015 ஆம் ஆண்டில் சீனாவின் முதல் பயோசேஃப்ட்டி லெவல் -4 (BSL-4) ஆய்வகத்தைத் திறந்தது.[2]

ஊகான் தீநுண்மியியல் ஆய்வு நிறுவனத்தால் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரசுகளால் 2019-20 கொரோனா வைரசு தொற்றுநோய் உருவானதாக 2020 ஜனவரியில் ஒரு யூகம் பரவலானது.[3] [4]

வெளவால் மீதான கொரானா வைரசுகள் குறித்த ஊகான் தீநுண்மியியல் ஆய்வு நிறுவனஆராய்ச்சிகளை குறித்து, சிலர் பாதுகாப்பு பற்றிய வருத்தங்களையும், தொடர்புடைய ஆதாரங்களையும் அமெரிக்காவிலிருந்து ஆவணப்படுத்தினர்.

ஊகான் தீநுண்மியியல் ஆய்வு நிறுவனத்தில் வெளவால்கள் மீது விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேற்கொள்ளும் போது கொரானா வைரசுகள் தற்செயலாக தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ஏப்ரல் 2020 இல் நிரூபிக்கப்படாத அறிக்கைகள் மூலம் விசாரணைகளை தொடங்கினர்.[5][6][7][8]

வரலாறு தொகு

இந்த நிறுவனம் 1956 ஆம் ஆண்டில் சீன அறிவியல் கல்வியகத்தின் (CAS) கீழ் ஊகான் நுண்ணுயிரியல் ஆய்வகமாக நிறுவப்பட்டது. 1961-ல்தென் சீனா நுண்ணுயிரியல் ஆய்வு நிறுவனம் என்ற பெயரில் இருந்த இந்நிறுவனம், 1962 இல்ஊகான் நுண்ணுயிரியல் நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது.

1970 ஆம் ஆண்டில், ஊபேய் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டபோது இது ஊபேய் மாகாண நுண்ணுயிரியல் நிறுவனமாக மாறியது.ஜூன் 1978 இல், இது சீன அறிவியல் கல்வியகம் (CAS) என திரும்பி, ஊகான் தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது.[9][10][11]

2015 ல் லியோனைச் சேர்ந்த பிரெஞ்சு அரசு சி.ஐ.ஆர்.ஐ ஆய்வகத்துடன் இணைந்து 300 மில்லியன் யுவான் (44 மில்லியன்) செலவில் தேசிய உயிர் பாதுகாப்பு ஆய்வகத்தின் பணி நிறைவடைந்தது. இது சீனாவின் முக்கிய பகுதியில் கட்டப்பட்ட முதல் பயோசேஃப்ட்டி லெவல் -4 (BSL–4) ஆய்வகமாகும். [12][13]ஆய்வக விரிவாக்கத்திற்காக அமெரிக்க அரசாங்கத்தால் ஓரளவு நிதியளிக்கப்பட்டது. [14]2003ல் கருத்தில் கொண்டவாறு விரிவாக்கம் முடிவதற்கு குறிப்பிட்ட காலமெடுத்தது.

இந்த ஆய்வகம் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் தலைநகரமான ஆஸ்டின்-ல் அமைந்துள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள கால்வெஸ்டன் தேசிய ஆய்வகத்திடம் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது.[15]

கொரோனா வைரசு ஆராய்ச்சி தொகு

2005 -ல் ஊகான் தீநுண்மியியல் ஆய்வு நிறுவனத்தை சார்ந்த ஆராய்சியாளர்களை உள்ளடக்கிய ஒரு குழு சீனாவின் குதிரைவாலி வெளவால்கள் தான் சார்ஸ் போன்ற கொரோனா வைரசுகளின் இயற்கை களஞ்சியங்கள் என்று கண்டுபிடித்து ஆய்வறிக்கையை வெளியிட்டது.[16]

பல ஆண்டுகளாக இந்த ஆய்வைத் தொடர்ந்த ஆய்வு நிறுவனத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள், சீனா முழுவதும் பல இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வெளவால்களில் தனிமைப்படுத்திய 300க்கும் மேலான வெளவால் வைரசுத்தொடர்களின் மாதிரிகளை ஆராய்ந்தார்கள். [17]

2015 -ல் எலா உயிரணுக்களை (HeLa) பாதிக்கக்கூடிய கொரோனா வைரசை உருவாக்க முடியுமா என்பது குறித்த வெற்றிகரமான ஆய்வறிக்கையை அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.

குறிப்புகள் தொகு

  1. "现任领导". Archived from the original on 2020-02-24. பார்க்கப்பட்ட நாள் 2020-04-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. https://www.nature.com/news/inside-the-chinese-lab-poised-to-study-world-s-most-dangerous-pathogens-1.21487
  3. https://www.washingtonpost.com/world/2020/01/29/experts-debunk-fringe-theory-linking-chinas-coronavirus-weapons-research/
  4. https://www.sciencemag.org/news/2020/02/scientists-strongly-condemn-rumors-and-conspiracy-theories-about-origin-coronavirus
  5. https://www.washingtonpost.com/opinions/2020/04/14/state-department-cables-warned-safety-issues-wuhan-lab-studying-bat-coronaviruses/
  6. https://www.forbes.com/sites/kenrapoza/2020/04/14/the-washington-post-goes-rogue-china-lab-in-focus-of-coronavirus-outbreak/
  7. https://www.nbcnews.com/news/china/u-s-intel-community-examining-whether-coronavirus-emerged-accidentally-chinese-n1185371
  8. https://www.forbes.com/sites/kenrapoza/2020/04/14/the-washington-post-goes-rogue-china-lab-in-focus-of-coronavirus-outbreak/
  9. "History". Wuhan Institute of Virology, CAS. Archived from the original on 29 July 2019. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  10. https://www.bbc.com/news/science-environment-52318539
  11. https://www.nytimes.com/2020/04/11/us/politics/coronavirus-trump-response.html
  12. David Cyranoski (2017-02-22). "Inside the Chinese lab poised to study world's most dangerous pathogens". Nature 592 (7642): 399–400. doi:10.1038/nature.2017.21487. பப்மெட்:28230144. Bibcode: 2017Natur.542..399C. 
  13. "China Inaugurates the First Biocontainment Level 4 Laboratory in Wuhan". Wuhan Institute of Virology, Chinese Academy of Sciences. 3 February 2015. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 April 2016.
  14. https://www.forbes.com/sites/kenrapoza/2020/04/14/the-washington-post-goes-rogue-china-lab-in-focus-of-coronavirus-outbreak/
  15. Adam Taylor (29 January 2020). "Experts debunk fringe theory linking China's coronavirus to weapons research". Washington Post. https://www.washingtonpost.com/world/2020/01/29/experts-debunk-fringe-theory-linking-chinas-coronavirus-weapons-research/. பார்த்த நாள்: 3 February 2020. 
  16. Li, Wendong; Shi, Zhengli; Yu, Meng; Ren, Wuze; Smith, Craig; Epstein, Jonathan H; Wang, Hanzhong; Crameri, Gary et al. (28 Oct 2005). "Bats Are Natural Reservoirs of SARS-Like Coronaviruses". Science 310 (5748): 676–679. doi:10.1126/science.1118391. பப்மெட்:16195424. Bibcode: 2005Sci...310..676L. https://archive.org/details/sim_science_2005-10-28_310_5748/page/676. 
  17. David Cyranoski (1 October 2017). "Bat cave solves mystery of deadly SARS virus — and suggests new outbreak could occur". nature.com இம் மூலத்தில் இருந்து 17 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200117043400/https://www.nature.com/articles/d41586-017-07766-9. பார்த்த நாள்: 26 January 2020.