ஊசி மலை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின், நீலகிரி மலைகளில் உள்ள ஒரு சிகரம் ஆகும்.

இந்த மலையானது கூடலூர் அருகே உதகை செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் 1438 மீட்டர். இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி உண்டு. இங்கு நீலகிரி மந்தி வகை குரங்குகள் அதிக அளவில் உள்ளன. நீலகிரி சிரிப்பான் உட்பட பல்வேறு பறவைகளும் காணப்படுகின்றன.[1] இந்த மலையில் உள்ள காட்சி முனையில் இருந்து மாயாறு வனப்பகுதியும், அதன் மையத்தில் உள்ள வயல்வெளிகளையும் காணலாம்.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசி_மலை&oldid=3064902" இலிருந்து மீள்விக்கப்பட்டது