ஊதாக் கடல் விண்மீன்

ஊதாக் கடல் விண்மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Forcipulatida
குடும்பம்:
Asteriidae
பேரினம்:
இனம்:
P. ochraceus
இருசொற் பெயரீடு
Pisaster ochraceus
Brandt, 1835

ஊதாக் கடல் விண்மீன் (Purple Sea Star) அல்லது காவிவண்ண நட்சத்திரமீன் (Ochre Sea Star) பசிபிக் பெருங்கடற் பகுதியில் பொதுவாகக் காணப்படும் ஒரு கடல் விண்மீன் இனமாகும் (Pisaster ochraceus). மறைதிறவு இனக் கருதுகோளில் (en:keystone species) முக்கியமானதாக இவ்வினம் விளங்குகின்றது. கலிபோர்னிய கருநீலச்சிப்பி (Mytilus californianus ) போன்ற சிப்பி இனங்களிற்கு கொன்றுண்ணியாக விளங்கி அவற்றை உணவாகப் பயன்படுத்துவதன் மூலம் ஊதாக் கடல் விண்மீன்கள் சூழ்நிலையியல் சமநிலையைப் பேணுகின்றன. இத்தகைய விண்மீன்கள் இல்லாத சந்தர்ப்பம் ஒன்று செயற்கையாக உருவாக்கப்பட்டபோது கருநீலச்சிப்பிகளின் எண்ணிக்கை பெருகியது, அலையிடை கடல் மண்டலத்தில் அவற்றின் ஆதிக்கம் பெரிதாகியது, இது சிப்பிகளின் உண்ணும் தாவர வகையான மிதவைத் தாவர உயிரிகள் (en:Phytoplankton) அழிக்கப்படுவதற்கு உந்துகோலாக அமைந்தது.[1]

இந்த நிகழ்வு, சூழ்நிலையியலில் ஒரு தீங்கான விளைவாகும். புவியின் வளிமண்டலத்திற்கு ஒட்சிசனை வழங்குவதில் இந்த மிதவைத் தாவர உயிரிகள் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. மிதவைத் தாவர உயிரிகளின் எதிரியான சிப்பி இனங்களை மட்டுப்படுத்தி வைத்திருப்பதனால் நட்சத்திரமீன் ஒரு திறவு இனமாக, சூழலைப் பாதுகாக்கும் உயிரியாக நோக்கப்படுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Holsinger, K. (2005). Keystone species. Retrieved May 10, 2010, from http://darwin.eeb.uconn.edu/eeb310/lecture-notes/interactions/node2.html பரணிடப்பட்டது 2010-06-30 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதாக்_கடல்_விண்மீன்&oldid=3924706" இலிருந்து மீள்விக்கப்பட்டது