ஊமைச் செந்நாய்

2021இல் வெளியான தமிழ்த் திரைப்படம்

ஊமைச் செந்நாய் (Oomai Sennaai) என்பது 2021ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளிவந்த இந்திய நாடகத் திரைப்படமாகும். இதை அர்ஜுனன் ஏகலைவன் இயக்கியிருந்தார். படத்தில் மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்த இது 10 திசம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது.

ஊமைச் செந்நாய்
இயக்கம்அர்ஜுனன் ஏகலைவன்
தயாரிப்புஅர்ஜுனன் ஏகலைவன்
கதைஅர்ஜுனன் ஏகலைவன்
இசைசிவா
நடிப்புமைக்கேல் தங்கதுரை
சனம் ஷெட்டி
ஒளிப்பதிவுகல்யாண் வெங்கட்ராமன்
படத்தொகுப்புஅதுல் விஜய்
கலையகம்லைப் கோஸ் ஆன் பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 10, 2021 (2021-12-10)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

தொகு

இந்தத் திரைப்படம் ஒரு தனியார் துப்பறியும் நபரின் கதையை விவரிக்கிறது. அவர் தனது வாழ்க்கையை மாற்ற முடிவு செய்கிறார். ஆனால் அவரது கடைசி பணியின் பின்னால் உள்ள மனிதர்களின் விளைவுகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது. பேராசை கொண்ட அரசியல்வாதிகள், ஊழல் காவலர்கள், இரக்கமற்ற கும்பல்களால் முன்வைக்கப்படும் சவால்களின் வலையில் அவர் இறுதியில் சிக்கிக் கொள்கிறார்.

நடிகர்கள்

தொகு
  • பிரபாகராக மைக்கேல் தங்கதுரை
  • அமுதாவாக சனம் ஷெட்டி
  • சாய் ராஜ்குமார்
  • ரத்தினமாக கஜராஜ்
  • அழகப்பனாக ஜெயக்குமார்
  • அருள் டி சங்கர்

வெளியீடு

தொகு

இப்படம் 10 திசம்பர் 2021 அன்று தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு விமர்சகர் படத்திற்கு நேர்மறையான விமர்சனத்தை அளித்தார். "படம் அதன் மிதமான செலவை விட உயர்ந்தது. மேலும், பெரும்பாலான நேரங்களில் புதிரானதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது" என்று குறிப்பிட்டு, தொழில்நுட்பக் குழு மற்றும் நடிகை சனம் ஷெட்டியின் செயல்பாடுகளைப் பாராட்டினார்.[1][2] தினமலர் மற்றும் தினத்தந்தி போன்ற தமிழ் செய்தித்தாள்களின் மற்ற விமர்சகர்களும் படத்தை மதிப்பாய்வு செய்தனர்.[3][4][5]

சான்றுகள்

தொகு
  1. "Sanam Shetty goes deglam for a revenge thriller - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  2. "Oomai Sennaai Movie Review: Oomai sennaai is a debut feature that gets it right, mostly!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  3. "ஊமைச் செந்நாய் - விமர்சனம் {2.25/5} : ஊமைச் செந்நாய் - பதுங்கவுமில்லை, பாயவுமில்லை - Oomai Sennaai".
  4. "த்ரில்லர் கதை - 'ஊமை செந்நாய்' சினிமா விமர்சனம்". 17 December 2021.
  5. "திரை விமர்சனம் : ஊமைச் செந்நாய்...! - நிதானமான த்ரில்லர் சினிமா...!".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊமைச்_செந்நாய்&oldid=3742387" இலிருந்து மீள்விக்கப்பட்டது