ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, எல்.கே.சி.நகர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,எல்.கே.சி.நகர் இது தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகரில் கணபதி எண்ணெய் ஆலையின் பின்புறம் குளத்தின் கரையில் அமைந்துள்ளது.[1]
தொடக்கப்பள்ளி
தொகுஇப்பள்ளி முதன்முதலில் ஆரம்ப பள்ளியாக தொடங்கப்பட்டது. மற்றும் எல்.கே.சி.நகர் பகுதியில் வாழும் மக்களின் பெரும் முயற்சியால் பல நன்கொடைகள் பெறப்பட்டு சிமெண்ட் ஒடுகள் கொண்ட 2 அறைகளில் செயல்பட்டது. இதனை அப்போதைய வெள்ளகோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.சுவாமிநாதன் துவங்கி வைத்தார்.
நடுநிலைப்பள்ளி
தொகு2010 ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளிக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 3 அறைகள் கொண்ட வலுவான இரண்டு கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.[2] ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை கிழக்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆறு முதல் எட்டு வகுப்புகள் வரை தெற்குப் பகுதியில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
சாதனைகள்
தொகுஇப்பள்ளியில் 2014, 2015 ஆம் ஆண்டில் நடந்த தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் (NMMS EXAM) பல மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "MAP VIEW". பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2017.
- ↑ "website details". பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2017.