ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, செவ்வாய்ப்பட்டி
செவ்வாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (PUMS SEVAIPATTI) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டத்தின் கறம்பக்குடி என்ற ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
நிா்வாகம்
தொகுஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக 23.1.1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின் நடுநிலைப்பள்ளியாக 6.6.2008 அன்று தரம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கறம்பக்குடி உதவித் தொடக்கக் கல்வி அலுவலா் அவர்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படுகிறது.
மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள்
தொகுபள்ளியில் மொத்தமாக 262 மரணவா்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு தலைமையாசிரியா் மூன்று பட்டதாாி ஆசிாியா்கள் நான்கு இடைநிலை ஆசிரியா்கள் என எட்டு ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்களான பாடநுால் சீருடை குறிப்பேடுகள் காலணிகள் எழுதுபொருட்கள் கல்வி உதவித்தொகைகள் போன்றவை வழங்கப்படுகின்றன. புதுக்கோட்டையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் இப்பள்ளி மாணவர்கள் கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்று பரிசு பெற்றனர்.[1]
கற்றல் முறைகள்
தொகுபள்ளியில் ஒன்று முதல் நான்கு வகுப்பு வரை செயல்வழி கற்றல் முறையிலும் ஐந்நாம் வகுப்பு மாணவா்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி முறையிலும் ஆறு முதல் எட்டு வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையிலும் கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது. பாடத்திறன்கள் கணினி தொடுதிரை வகுப்புகள் பாிசோதனைகள் மூலமும் கற்பிக்கப்படுகிறது.
பள்ளி புரவலர்கள்
தொகுபள்ளியானது பொதுமக்களின் ஒத்துழழைப்பால் மேம்பாடு அடைந்து வருகிறது.பள்ளிக்கு விழா மேடை ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் புதிய கட்டிடம் மின்விசிறி நாற்காலி தையல் இயந்திரம் பள்ளி புரவலர்கள் 102 பேர் மற்றும் ரோட்டரி சங்கம்மூலம் ஆழ்துளை கிணறு, தொடுதிரை அரங்கம், நுழைவாயில் போன்றவை நன்கொடையாக பள்ளிக்கு அளித்துள்ளனர்.
விழாக்கள்
தொகுஆண்டுதோறும் உணவுத்திருவிழா, அறிவியல் கண்காட்சி, ஆண்டுவிழா போன்ற விழாக்கள் நடைபெறுகிறது. பள்ளியானது மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக தோ்ந்தெடுக்கப்பட்டு சிறந்த பள்ளிக்கான விருதை 2014-2015 கல்வியாண்டில் பெற்றுள்ளது.
பள்ளி சிறப்பு
தொகு- குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
- வகுப்பறை சுவரோவியங்கள்
- கணினி வழிக்கல்வி
- இணையதள வசதி
- கோளரங்க வகுப்பறை
- தொடுதிரை வகுப்பறை