ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவு

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு

ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவு அல்லது தீவுப்பகுதி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளது. இப் பிரிவு யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு மேற்குத் திசையில் உள்ள தீவுக் கூட்டங்களில், அனலைதீவு, எழுவைதீவு, பருத்தித்தீவு, காரைநகர், வேலணைத்தீவின் வடக்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இப் பிரிவு 24 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் அனலைதீவில் 2 பிரிவுகளும், எழுவைதீவில் ஒன்றும், காரைநகரில் 9 பிரிவுகளும், வேலணைத்தீவில் 12 பிரிவுகளும் உள்ளன. இதன் நிர்வாகத் தலைமையகம் ஊர்காவற்றுறையில் அமைந்துள்ளது.

இது 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

மேற்கோள்கள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு