ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count) என்பது பறவையியலில் ஒரு சமூக அறிவியல் திட்டமாகும். இது ஆண்டுதோறும் பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வானது கார்னெல் லேப் ஆஃப் ஆர்னத்தாலஜி மற்றும் நேசனல் ஆடுபோன் சொசைட்டி ஆகியவற்றின் ஆதரவில் நிகழ்த்தபடுகின்றது. இந்த நான்கு நாள் நிகழ்வின் போது, உலகெங்கிலும் உள்ள பறவை நோக்கர்கள், அவர்கள் வாழும் பகுதியில் உள்ள பறவைகளின் விவரங்களை கணக்கிட்டு தகவல் அளிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த தரவானது ஒரு இணைய இடைமுகம் வழியாக இயங்கலையில் சமர்ப்பிக்கப்படுகிறது. இத்தரவுகளானது அறிவியல் ஆய்வுக்குப் பயன்படுத்த தொகுக்கப்படுகிறது. பார்வையில் படும் பறவைகள் குறித்த தகவல்களை இயங்கலையில் சேகரித்து, நிகழ்நேரத்தில் முடிவுகளைக் காண்பிக்கும் முதல் சமூக அறிவியல் திட்டமாக இத்திட்டம் உள்ளது. [1]
கண்ணோட்டம்
தொகுஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு முதன்முதலில் 1998 இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இது பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடத்தப்படுகிறது. [2] 2013 முதல், இந்த நிகழ்வை சர்வதேச பறவை நோக்கர்கள் கவனித்தனர். இப்போது யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம். மேலும் இதில் உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களும் கூடுதலாக ஆதரவளித்து பங்கேற்றுள்ளன. [3] [4] [5] ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்புடன் ஒத்துப்போகும் வகையில் பல தனித்தனி பறவைக் கண்காணிப்பு முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு உலகளவில் அறியப்பட்ட பறவை இனங்கள் கிட்டத்தட்ட பாதி இதில் அறியப்பட்டன. [6]
நிகழ்வின் போது சேகரிக்கப்பட்ட தரவுகள் தொழில்முறை அல்லாத பங்கேற்பாளர்களின் திறன்களில் உள்ள குறைபாடுகளை சமாளிப்பதற்காக நிபுணர்களால் சரிபார்க்கப்படுகிறது. [7] நிகழ்வின் விளைவாக வரும் தரவுகள் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பொதுவாக பறவைகளின் வாழ்விடங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. [8]
குறிப்புகள்
தொகு- ↑ "About the GBBC - GBBC". gbbc.birdcount.org. பார்க்கப்பட்ட நாள் 15 February 2018.
- ↑ Birds of the world. பார்க்கப்பட்ட நாள் 27 March 2015.
- ↑ "The Great Backyard Bird Count". National Park Services. U.S Department of Interior. பார்க்கப்பட்ட நாள் 27 March 2015.
- ↑ "Wildlife Institute of India participate in GBBC 2015". Wildlife Institute of India. Wildlife Institute of India. Archived from the original on 25 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
- ↑ "Conservation India takes part in GBBC". பார்க்கப்பட்ட நாள் 21 March 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-10-25. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
- ↑ Plec, Emily (2013). Perspectives on human-animal communication : internatural communication. New York: Routledge. p. 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415640053. பார்க்கப்பட்ட நாள் 27 March 2015.
- ↑ "Disappearing common birds send environmental wake-up call". https://news.google.com/newspapers?nid=1062&dat=20070621&id=z7QkAAAAIBAJ&pg=1720,2421240&hl=en. பார்த்த நாள்: 15 April 2015.