எக்சாபெர்குளோரேட்டோ அலுமினேட்டு
எக்சாபெர்குளோரேட்டோ அலுமினேட்டு (Hexaperchloratoaluminate) அயனி என்பது மூன்று எதிர்மின் சுமைகளுடன் அலுமினியத்தைக் கொண்ட பெர்குளோரேட்டின் ஓரு கூட்டமைப்பாகும். எக்சாநைட்ரேட்டோ அலுமினேட்டு மற்றும் டெட்ராபெர்குளோரேட்டோ அலுமினேட்டு ஆகிய சேர்மங்களுடன் இது தொடர்பு கொண்டுள்ளது. இவையனைத்தும் வலிமையான ஆக்சிசனேற்றும் பொருட்களாகும் [1]. இலித்தியம்யெக்சாபெர்குளோரேட்டோ அலுமினேட்டு, அமோனியம்யெக்சாபெர்குளோரேட்டோ அலுமினேட்டு, டெட்ராமெத்திலமோனியம்யெக்சாபெர்குளோரேட்டோ அலுமினேட்டு மற்றும் டைரைநைட்ரோனியம்யெக்சாபெர்குளோரேட்டோ அலுமினேட்டு போன்றவை எக்சாபெர்குளோரேட்டோ அலுமினேட்டு உப்புகள் வரிசையில் உருவாக்கப்படும் திண்மங்களாகும் [1].
தயாரிப்பு தொகு
அலுமினியம் டிரைகுளோரைடுடன் பல்வேறு வகையான பெர்குளோரேட்டுகள் -10° வெப்பநிலையில் இணைந்து நீர்ம கந்தக டை ஆக்சைடில் யெக்சாபெர்குளோரேட்டோ அலுமினேட்டு தயாரிக்கப்படுகிறது.[1]
3NO2ClO4 + 3Li3ClO4 + AlCl3 → 3NO2Cl + Li3Al(CLO4)6[1]
3NO2ClO4 + 3(NH4)ClO4 + AlCl3 → 3NO2Cl + (NH4)3Al(CLO4)6[1]
6NO2ClO4 + AlCl3 → 3NO2Cl + (NO2)3Al(CLO4)6[1][1] அலுமினியம் நைட்ரேட்டை 125° செல்சியசு வெப்பநிலையில் நைட்ரசோனியம் அல்லது நைட்ரோனியம் பெர்குளொரேட்டுடன் சேர்த்து சூடுபடுத்துவதால் யெக்சாபெர்குளோரேட்டோ அலுமினேட்டு தயாரிக்கப்படுகிறது. 10-14NOClO4 + Al(NO3)3 → 3NO2Cl + (NO2)3Al(CLO4)6[1]
6-10NO2ClO4 + Al(NO3)3 → 3NO2Cl + (NO2)3Al(CLO4)6[1]
3NO2ClO4 + 3K3ClO4 + AlCl3 → 3NO2Cl + K3Al(CLO4)6[1]
பொட்டாசியம்யெக்சாபெர்குளோரேட்டோ அலுமினேட்டு இருப்பதற்கும் இல்லாமலிருப்பதற்குமான வாய்ப்புகள் உண்டு.[1]
ஐதரசீனியம்யெக்சாபெர்குளோரேட்டோ அலுமினேட்டு தூய்மையற்ற நிலையிலேயே தயாரிக்க இயல்கிறது. 3NO2ClO4 + 3(NH2H5)ClO4 + AlCl3 → 3NO2Cl + (NH2H5)3Al(CLO4)6[1]
குவாடினியம்யெக்சாபெர்குளோரேட்டோ அலுமினேட்டு பின்வருமாறு தயாரிக்கப்படுகிறது. 3NO2ClO4 + 3C(NH2)3ClO4 + AlCl3 → 3NO2Cl + (C(NH2)3)3Al(CLO4)6[1]