எக்சாபோரேன்

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

எக்சாபோரேன் (Hexaborane) என்பது (B6H10) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எக்சாபோரேன்(12) என்ற சேர்மத்திலிருந்து பிரித்தறிவதற்காக, எக்சாபோரேன்(10) (Hexaborane(10)) என்ற பெயராலும் இச்சேர்ம்ம் அழைக்கப்படுகிறது. நிறமற்ற நீர்ம்மாகவும் காற்றில் நிலைப்புத்தன்மையற்றும் இச்சேர்மம் காணப்படுகிறது [1].

எக்சாபோரேன்
இனங்காட்டிகள்
23777-80-2
InChI
  • InChI=1S/B6H10/c7-1-2-6(1)3(7)9-5(6)10-4(6)8-2/h1-6H
    Key: JLQWWRKFGJQFTI-UHFFFAOYSA-N
பண்புகள்
B6H10
வாய்ப்பாட்டு எடை 74.94 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பென்டாபோரேன்(11) சேர்மத்தை புரோமினேற்றம் செய்து பின்னர் புரோட்டான் நீக்கம் அல்லது புரோமைடு நீக்கம் செய்து [BrB5H7]− அயனி உருவாக்கப்படுகிறது. இந்த எதிர்மின் அயனித் தொகுதி டைபோரேனுடன் சேர்த்து ஒடுக்கப்பட்டு நடுநிலை வேதிப்பொருள் தயாரிக்கப்படுகிறது :[1]

K[BrB5H7] + 1/2 B2H6 → KBr + B6H10.

பென்டாபோரேன்(11) சேர்மத்தை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தியும் இதைத் தயாரிக்கலாம்.

வினைகள்

தொகு

B6H10 சேர்மத்தை புரோட்டான் நீக்கம் செய்து [B6H9]− அயனியையும் அல்லது B6H10 சேர்மத்தை புரோட்டானேற்றம் செய்து [B6H11]+.அயனியையும் பெறமுடியும் [1].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Remmel, R. J.; Johnson, H. D.; Brice, V. T.; Shore, S. G.; Gaines, D. F. (1979). "Hexaborane(10)". Inorganic Syntheses 19: 247. doi:10.1002/9780470132500.ch58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132500. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சாபோரேன்&oldid=2637467" இலிருந்து மீள்விக்கப்பட்டது