எக்சாம்ப்
எக்சாம்ப் (Xampp) என்பது இலவசமாக மற்றும் திறந்த மூலக்கூறக வழங்கப்படும் இணைய வழங்கி பொதியாகும், இது அப்பாச்சி வழங்கி, மையெசுக்யூயெல் தரவுத்தளம், மேலும் பி.எச்.பி, பேர்ல் இயைபாக்கிகளைக் கொண்டுள்ளது.
பெயர் வரலாறு
தொகுஎக்சாம்ப் (xampp) என்ற பெயரின் விளக்கம்,
- X - (அனைத்து இயங்குதளத்திலும் செயற்படும்)
- A - அப்பாச்சி எச்.டி.பி சேவையகம்
- M - மையெசுக்யூயெல்
- P - பிஎச்பி
- P - பேர்ல்
இப் பொதியானது குனூ பொதுக் கட்டற்ற அனுமதியின்கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. எக்சாம்ப் ஆனது மைக்கிரோசொப்ட் வின்டோசு, லினிக்சு, சோலாரிக்சு, மற்றும் மெக் ஓஎசு எக்ச் ஆகிய இயங்குதளங்களிக்கிற்காக உள்ளது.
தேவைப்பாடுகளும் வசதிகளும்
தொகுஎக்சாம்பானது ஒரே ஒரு கோப்பின் மூலமாக இலகுவாக ஒழுங்கமைக்கக் கூடியதகும். தொடர்ச்சியாக இதன் புதிய பதிப்புக்கள் பதிவேற்றப்படுகின்றன. மேலும் பிஎச்பி நிர்வாகம் மற்றும் ஒப்பின் எசுஎசுஎல் வசதிகளையும் இது கொண்டுள்ளது. இது முழுமையான, சிறிய மற்றும் நிலையான பதிப்புக்கள் தரப்படுகின்றன.