எக்சாயைதராக்சிபென்சீன் திரிசு ஆக்சலேட்டு
எக்சாயைதராக்சிபென்சீன் திரிசு ஆக்சலேட்டு (Hexahydroxybenzene trisoxalate) என்பது C12O12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். கார்பனுடைய ஆக்சைடு வகைச் சேர்மமான இதன் மூலக்கூற்றில், ஆறு ஐதரசன் அணுக்கள் மூன்று ஆக்சலேட்டு குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட ஒரு பென்சீன் உள்ளகம் உள்ளது. பென்சீன்யெக்சால் மற்றும் ஆக்சாலிக் அமிலத்தின் ஆறுமடிப்பு எசுத்தராக இதைப் பார்க்க முடியும்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எக்சாயைதராக்சிபென்சீன் திரிசு ஆக்சலேட்டு | |
முறையான ஐயூபிஏசி பெயர்
2,3,6,7,10,11-எக்சாயைதரோ-1,4,5,8,9,12- எக்சாக்சாடிரைபீனைலீன்-2,3,6,7,10,11-எக்சோன் | |
வேறு பெயர்கள்
1,4,5,8,9,12- எக்சாக்சாடிரைபீனைலீன் -2,3,6,7,10,11-எக்சோன்
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 28426725 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C12O12 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எச்.எசு.வெர்ட்டெர் மற்றும் ஆர்.தொமினிக் ஆகியோர் 1967 ஆம் ஆண்டு இதைக் கண்டறிந்தனர்[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ H. S. Verter, R. Dominic (1967), A new carbon oxide: synthesis of hexahydroxybenzene tris oxalate. Tetrahedron, Volume 23, Issue 10, , Pages 3863-3864 எஆசு:10.1016/S0040-4020(01)97894-9