ஆக்சாலிக் அமிலம்
ஆக்சாலிக் அமிலம் (ஆங்கிலம்: Oxalic acid) என்பது H2C2O4 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். நிறமற்ற படிக திடப்பொருளான இது நீரில் கரைந்து நிறமற்ற கரைசலை கொடுக்கிறது. இந்த கரிம அமிலம் டைகார்பாக்சிலிக் அமிலம் என்ற பிரிவின்கீழ் வகைப் படுத்தப்பட்டுள்ளது. அசிட்டிக் அமிலத்துடன் ஒப்புநோக்குகையில் இது ஒரு வலிமை வாய்ந்த அமிலமாகும்.ஆக்சாலிக் அமிலம் ஒர் ஆக்சிசன் ஒடுக்கியாகவும் இதன் இணைப்புக் காரமான ஆக்சலேட் (C2O42−) உலோக நேர் அயனிகளுக்கு இணை வினை பொருள் காரணியாக செயல்படுகிறது. பொதுவாக, ஆக்சாலிக் அமிலம் H2C2O4 • 2H2O என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட இருநீரேறியாக காணப்படுகிறது அதிகமாக ஆக்சாலிக் அமிலத்தை வாய்வழி உட்கொள்ளுதலும் தோலில் நாட்பட படுதலும் ஆபத்தானது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈத்தேன் டையோயிக் அமிலம்
| |||
வேறு பெயர்கள்
oxalic acid
| |||
இனங்காட்டிகள் | |||
144-62-7 | |||
3DMet | B00059 | ||
ATCvet code | QP53AG03 | ||
Beilstein Reference
|
385686 | ||
ChEBI | CHEBI:16995 | ||
ChEMBL | ChEMBL146755 | ||
ChemSpider | 946 | ||
DrugBank | DB03902 | ||
EC number | 205-634-3 | ||
Gmelin Reference
|
2208 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C00209 | ||
ம.பா.த | Oxalic+acid | ||
பப்கெம் | 971 | ||
வே.ந.வி.ப எண் | RO2450000 | ||
| |||
UNII | 9E7R5L6H31 | ||
UN number | 3261 | ||
பண்புகள் | |||
C2H2O4 | |||
வாய்ப்பாட்டு எடை | 90.03 g·mol−1 (anhydrous) 126.07 g mol−1 (dihydrate) | ||
தோற்றம் | White crystals | ||
அடர்த்தி | 1.90 g cm−3 (anhydrous) 1.653g cm−3 (dihydrate) | ||
உருகுநிலை | 102 °C (216 °F; 375 K) | ||
14.3 g/100ml (25 °C) | |||
கரைதிறன் | 23.7 g/100ml (15 °C) in எத்தனால் 1.4 g/100ml (15 °C) in diethyl ether [1] | ||
காடித்தன்மை எண் (pKa) | 1.25, 4.14[2] | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | Toxic | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 166 °C (331 °F; 439 K) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
தொடர்புடைய சேர்மங்கள் | oxalyl chloride disodium oxalate calcium oxalate phenyl oxalate ester | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிக்கும் முறை
தொகுகார்போ ஐதரேட்டுகள் அல்லது சுக்ரோஸை அடர் நைட்ரிக் அமிலத்துடன் வெனேடியம் பென்டாக்சைடு வினையூக்கியின் முன்னிலையில் ஆக்சிசனேற்றம் செய்து ஆக்சாலிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. சுக்ரோஸ் மூலக்கூறிலுள்ள – CHOH – CHOH அலகுகள் பிரிந்து ஆக்சிசனேற்றமடைந்து ஆக்சாலிக் அமிலமாகின்றன.
4 ROH + 4 CO + O2 → 2 (CO2R)2 + 2 H2O
முன்னோடிகளில் பலர் கிளைக்காலிக் அமிலம் மற்றும் எத்திலீன் கிளைக்கால் முதலியவற்றை பயன்படுத்தி ஒரு புதிய முறையில் ஆக்சாலிக் அமிலம் தயாரித்தனர். கிளைக்காலை அடர் நைட்ரிக் அமிலத்துடன் ஆக்சிசனேற்றம் செய்து ஆக்சாலிக் அமிலம் பெறுவது இம்முறையாகும்.
மேற்கோள்கள்
தொகு.
- ↑ Radiant Agro Chem. "Oxalic Acid MSDS". Archived from the original on 2011-07-15. பார்க்கப்பட்ட நாள் 2014-09-13.
- ↑ Bjerrum, J., et al. Stability Constants, Chemical Society, London, 1958.