எங்கலகுப்பே சீதாராமையா வெங்கடராமையா
எங்கலகுப்பே சீதாராமையா வெங்கடராமையா (Engalaguppe Seetharamiah Venkataramiah)(18 திசம்பர் 1924 - 24 செப்டம்பர் 1997 [1]) என்பவர்இந்தியாவின் 19வது தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார். இவர் 19 சூன் 1989 முதல் 17 திசம்பர் 1989 அன்று ஓய்வு பெறும் வரை பணியாற்றினார்.
எங்கலகுப்பே சீதாராமையா வெங்கடராமையா | |
---|---|
19ஆவது இந்தியத் தலைமை நீதிபதி | |
பதவியில் 19 சூன் 1989 – 17 திசம்பர் 1989 | |
பரிந்துரைப்பு | நீதிபதி குழுவின் பரிந்துரையின் பேரில் இந்தியத் தலைமை நீதிபதி இ. சு. பதக் |
நியமிப்பு | இந்தியக் குடியரசுத் தலைவர் ரா. வெங்கட்ராமன் |
முன்னையவர் | இ. சு. பதக் |
பின்னவர் | சபையாசாசி முகர்ஜி |
தலைமை நீதிபது, பம்பாய் உயர் நீதிமன்றம் | |
முன்னையவர் | பிரகாசு சந்திர தாதியா டீ. என். பாட்டீல் (பொறுப்பு) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 திசம்பர் 1924 |
இறப்பு | 24 செப்டம்பர் 1997 | (அகவை 72)
இவர் 1946-ல் தனது வழக்கறிஞர் பணியினைத் தொடங்கினார். நவம்பர் 1970-ல் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
மார்ச் 1979-ல், இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் சூன் 1989-ல் இந்தியாவின் தலைமை நீதிபதியானார். கர்நாடகாவிலிருந்து இந்தியாவின் தலைமை நீதிபதி ஆன முதல் நபர் இவர்தான். இவர் 24 செப்டம்பர் 1997 அன்று மாரடைப்பால் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Obituary Events in 1997". Archived from the original on 2003-12-31. பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.