எசுத்தர் அவுவா ஒக்லூ

எசுத்தர் அவுவா ஒக்லூ (Esther Afua Ocloo, 18 ஏப்பிரல் 1919 - 8 பெப்ரவரி 2002) கானா நாட்டு தொழில் முனைவர்களில் ஒருவர். மீச்சிறு கடன் அல்லது குறுங்கடன் அளிப்பதில் முன்னோடி. சிறு தொழில் நிறுவனங்களும் சிறு வணிகம் செய்பவர்களும் இதனால் பயன் பெற்றனர்.

1976 ஆம் ஆண்டு பெண்கள் உலக வங்கியை மிசேலா வால்ச்சுடனும் எலா மாட் உடனும் இணைந்து தொடங்கியவர். பெண்கள் உலக வங்கியின் பொறுப்பாளர்களின்முதல் தலைவராக இருந்தார். பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உழைத்ததற்காக எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார்.

அ்வுவா நகுலேநு என்ற பெயரில் கானாவின் வோல்டா பகுதியில் இச்யார்ச் நுகுலேநு என்ற கொல்லருக்கும் இச்யார்சினியா என்பவருக்கும் பிறந்தார். பிரைசுபைடேரியன் தொடக்க பள்ளிக்கு பாட்டி மூலம் சேர்த்துவிடப்பட்டார். பின்னர் இருபாலரும் படிக்கும் பெகி பிலெங்கோ உறைவிடப்பள்ளியில் சேர்ந்தார். ஏழ்மையின் காரணமாக வார நாட்களில் வீட்டுக்கு வந்து வீட்டிலிருந்து உணவு பொருட்களை கொண்டு வருவார் பணத்தை மிச்சப்படுத்த அவற்றை கொண்டு இவரே சமையல் செய்வார். கல்வி உதவித்தொகையை வென்று அசிமோடா பள்ளியில் 1931 முதல் 1941 வரை படித்தார். அங்கு கேம்பிரிட்ச் பள்ளி சான்றிதழை பெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுத்தர்_அவுவா_ஒக்லூ&oldid=2565486" இருந்து மீள்விக்கப்பட்டது