எசுப்பாங்கிலம்
எசுப்பாங்கிலம், (Spanglish) ஓர் கலப்பு மொழியாகும். இது எசுப்பானியம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளும் கலந்ததால் ஏற்பட்ட வழக்காகும். எசுப்பானியர்கள் வாழும் பகுதிகளில் ஆங்கிலேயர்களாலும், ஆங்கிலேயர் பகுதியில் எசுப்பானியர்களாலும், பேசப்படுகிறது. இக்கலப்பு மொழி இலக்கணங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதாலும், பெருவழக்கில் சீரமைப் படுத்தப்பட்டு இல்லையென்பதாலும், ஒரு வரையறையுடன் இருப்பதில்லை. அமெரிக்க எசுப்பானியர்கள் பேசும் எசுப்பாங்கிலமும், அர்கெந்தீன ஆங்கிலேயர்கள் பேசும் எசுப்பாங்கிலமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு மொழியின் கட்டமைப்பிற்குட்பட்டு இன்னொரு மொழியின் சொற்கள் பயன்படுத்தப்படலாம். அல்லது இரு மொழிகளின் சொற்களும் கலந்தோ, ஒரு வழக்கில் இன்னொரு மொழியின் விதிகள் உட்படுத்தப்படோ இருக்கலாம்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Everson, Michael. "Registration form for 'spanglis'" (text) (in ஆங்கிலம்). IANA. Archived from the original on June 18, 2023. பார்க்கப்பட்ட நாள் March 12, 2021.
A judgement call by the tagger is expected to be made concerning the base prefix to be used.
- ↑ "Spanglish". Merriam-Webster Dictionary.
- ↑ "Salvador Tió's 100th Anniversary". November 15, 2011. Archived from the original on March 5, 2021. பார்க்கப்பட்ட நாள் October 22, 2019.