எசுமரால்டா மல்லாடா

எசுமரால்டா எருமினியா மல்லாடா இன்வர்னிழி (Esmeralda Herminia Mallada Invernizzi) (பிறப்பு: 10 ஜனவரி 1937) ஓர் உராகுவா வானியலாளரும் பேராசிரியரும் ஆவார். இவரது அறிவியல் புலப் பங்களிப்புகளுக்காக, ஒரு சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

எசுமரால்டா மல்லாடா
Esmeralda Mallada
பிறப்புஎசுமரால்டா எருமினியா மல்லாடா இன்வர்னிழி
10 சனவரி 1937 (1937-01-10) (அகவை 87)
மாண்டிவீடியோ, உராகுவே
படித்த கல்வி நிறுவனங்கள்உராகுவா குடியரசு பல்கலைக்கழகம்
அறியப்படுவது16277 8 மல்லாடா
வாழ்க்கைத்
துணை
எக்தர் தெ பெதன்கோர்த்
பிள்ளைகள்மார்செலோ, டேனியல்

வாழ்க்கைப் பணி

தொகு

இவர் ஆல்பெர்ட்டோ போச்சிடெசுட்டாவின் அண்டவரைவியல் மாணவர் ஆவார்.[1] உராகுவா குடியரசு பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் இவர் கிளாடி வர்காராவுடன் படித்தார். பின்னவர் மல்லாடாவுக்குப் பள்ளி மேனிலைக் கல்வி மன்ற அண்டவரைவியல் பேராசிரியர் போட்டிக்கான ஆயத்தங்களைச் செய்ய உதவியுள்ளார். இவர் தன் 21 ஆம் அகவையிலேயே பள்ளி மேனிலைக் கல்வியில் அண்டவரைவியல், கணிதவியல் பேரசிரியர் ஆனார். இவர் பல்கலைக்கழக அறிவியல் புலத்திலும் பாடங்கள் நடத்தியுள்ளார். இப்பல்கலைக்கழகத்தில் வானியலில் உரிமதாரர் பட்டம் பெற்றார். இப்போது இவர் ஓய்வு பெற்றுள்ளார்.

இவர்1952 அக்தோபர் 16 இல் போச்சின்டெசுட்டாவின் அழைப்பின் பேரில், உராகுவே நாட்டு பயில்நிலை வானியலளர் கழகத்தை நிறுவ பணிபுரிந்துள்ளவர்களில் ஒருவராவார்.[2] இவர் 2015 இல் அக்கழகத்தின் தலைவரானார்.[3] பன்னாட்டு வானியல் கழகச் சிறுகோள் மையம் 2015 இல் செவ்வாய்க்கும் வியழனுக்கும் இடையில் வட்டணையில் இருந்த ஒரு௵இறுகோளை இவரது நினைவாக [[16277 மல்லாடா எனப் பெயரிட்டுள்ளது.[2][4][5][6] இதுதான் முதன்முதலில் ஒரு சிறுகோளுக்கு உராகுவா நாட்டுப் பெண் பெயர் இடப்பட்டுள்ள நிகழ்வாகும்.[1]

வெளியீடுகள்

தொகு

ஜூலியா ஏஞ்சல் பெர்னான்டசுவுடன் இணைந்து மல்லாடா வெளியிட்ட பணிகள்:

  • "அகல் இரும விண்மீன்களின் பிணைவாற்றல்களின் பரவல்"
  • " வியழன் அண்மை தரைபரப்பு நீருக்கான வாய்ப்புள்ள வாயில்கள்"
  • " அகல் இரும விண்மீன்களின் இயங்கியல் படிமலர்ச்சி"[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Primera mujer astrónoma y docente uruguaya homenajeada con denominación de asteroide" [First Uruguayan Woman Astronomer and Teacher Honored With Asteroid Designation] (in Spanish). Uruguay Educa. பார்க்கப்பட்ட நாள் 19 November 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 "NASA nombró asteroide Esmeralda Mallada en homenaje a docente uruguaya" [NASA Names Asteroid Esmeralda Mallada in Honor of Uruguayan Teacher] (in Spanish). Subrayado. 11 March 2015. பார்க்கப்பட்ட நாள் 19 November 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Institucional" (in Spanish). Association of Amateur Astronomers. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 19 November 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "16277 Mallada (2000 JW74)". NASA Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 19 November 2017.
  5. "Asteroide con nombre de uruguaya" (in Spanish). El Observador. 12 March 2015 இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171201041416/http://elobservadormas.com.uy/noticia/2015/03/12/41/asteroide-con-nombre-de-uruguaya_300241/. 
  6. "Esmeralda, la uruguaya que viaja por el espacio" (in Spanish). El País. 13 March 2015. http://www.elpais.com.uy/vida-actual/esmeralda-uruguaya-viaja-espacio.html. 
  7. "Esmeralda Herminia Mallada". ResearchGate. பார்க்கப்பட்ட நாள் 19 November 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுமரால்டா_மல்லாடா&oldid=3965097" இலிருந்து மீள்விக்கப்பட்டது