எச்ஆர் 8799 (HR 8799) என்பது பூமியில் இருந்து 129 ஒளியாண்டுகள் தூரத்தில் பெகாசசு என்ற விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ள ஓர் இளம் (~60 மில்லியன் ஆண்டுகள் பழமையானது) விண்மீன் ஆகும். இது சூரியனை விட 1.5 மடங்கு எடையுடையதும், 4.9 மடங்கு ஒளிச்செறிவுடையதும் ஆகும்.

எச்ஆர் 8799 விண்மீன் (நடுவில்), இதன் கோள்கள்: எச்ஆர் 8799d, எச்ஆர் 8799c, எச்ஆர் 8799b

கோள்களின் தொகுதி தொகு

நவம்பர் 2008 இல், இவ்விண்மீனைச் சுற்றி வரும் மூன்று கோள்களை ஹவாயில் பொருத்தப்பட்டுள்ள ஜெமினி தொலைநோக்கிகளூடாகத் தாம் அவதானித்துள்ளதாக கனடாவின் வானியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்[1][2]. d, c, b என அழைக்கப்படும் இக்கோள்களின் சுற்றுவட்ட ஆரைகள் முறையே சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றிலும் பார்க்க 2.5 மடங்கு பெரியதாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Gemini Releases Historic Discovery Image of Planetary First Family
  2. "Astronomers capture first images of newly-discovered solar system". Archived from the original on 2013-11-26. பார்க்கப்பட்ட நாள் 2008-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்ஆர்_8799&oldid=3714691" இலிருந்து மீள்விக்கப்பட்டது