எச். கே. சீமா
எச். கே. சீமா (H. K. Sema; பிறப்பு சூன் 1,1943) என்பவர் இந்திய நீதிபதியும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகப் பணியாற்றியவரும் ஆவார்.[1] சீமா உத்தரப்பிரதேச மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
எச். கே. சீமா | |
---|---|
நீதிபதி-இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் 2002–2008 | |
நீதிபதி-குவகாத்தி உயர் நீதிமன்றம், கோகிமா இருக்கை | |
பதவியில் 1992–2001 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூன் 1943 நாகாலாந்து, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
முன்னாள் கல்லூரி | தூய யோவான் கல்லூரி, டார்ஜீலிங் (1967) அரசு சட்டக் கல்லூரி, மும்பை (1970) |
இளமை
தொகுசீமா 1943 சூன் 1 அன்று பிறந்தார். 1967ஆம் ஆண்டில் டார்ஜீலிங்கில் உள்ள தூய யோவான் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1970ஆம் ஆண்டில் மும்பை அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டப் பட்டம் பெற்றார்.[2]
வகித்தப் பதவிகள்
தொகு- இளைய அரசு வழக்கறிஞர், நாகாலாந்து-1971-1975.[2]
- உதவி தலைமை வழக்கறிஞர், நாகாலாந்து 16 நவம்பர் 1985 முதல்.[2]
- குவகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி, கோகிமா இருக்கை, 1992-2001 [3]
- சம்மு காசுமீர் உயர் நீதிமன்ற நீதிபதி, 7 சூன் 2001. செப்டம்பர் 12,2001 அன்று சம்மு-காசுமீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி[2]
- 2000 சனவரி 25 அன்று குசராத்து உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.[2]
- 2002 முதல் 2008 வரை இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி[2]
- உத்தரப்பிரதேச மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Former Supreme Court Judges of India". web archive. SCI. Archived from the original on 17 November 2018. பார்க்கப்பட்ட நாள் 17 May 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Former Hon'ble Judges of the Supreme Court of India/ Chief Justice of India, who served as Chief Justice/ Hon'ble Judge of this High Court". ghconline.gov.in. பார்க்கப்பட்ட நாள் 8 April 2022.
- ↑ "GHC judge profile". Kohima high court. பார்க்கப்பட்ட நாள் 17 May 2020.