எட்கர் ரூபின்

டேனிஷ் உளவியலாளர்

எட்கர் ஜான் ரூபின் (செப்டம்பர் 6, 1886 - மே 3, 1951) ஒரு டேனிஷ் உளவியலாளர் / நிகழ்வியல் நிபுணர் ஆவார். ரூபின் குவளை போன்ற ஒளியியற் கண்மாயைகளில் காணப்பட்டதைப் போல உருவம்-தளம் தொடர்பான புலக்காட்சி உணர்வைப் பற்றிய அவரது பணிக்காக நன்கறியப்பட்டவர் ஆவார்.

ரூபினின் குவளைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

யூத பெற்றோருக்கு பிறந்த ரூபின் கோபனாவனில் பிறந்து வளர்ந்தார். 1904 ஆம் ஆண்டில் கோபனாவன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அவர் உளவியலில் தேர்ச்சி பெற்றார் மற்றும் 1910 ஆம் ஆண்டில் தத்துவத்தில் தனது முதுகலைப் பட்டத்திற்கான தேர்வை முடித்தார்.

முழுமைக்காட்சி உளவியல்தொகு

உரு - பின்னணி அமைப்பில் நிபுணத்துவம் பெற்ற ரூபின், அடுத்த இரண்டு ஆண்டுகளை ஜெர்மனியின் கோட்டிங்கனில் ஜார்ஜ் எலியாஸ் முல்லருக்கு ஆராய்ச்சி கூட்டாளியாகக் கழித்தார். காட்சி உருக்களைப் பல்வேறு கோணங்களிலும் அளவிலும் அங்கீகரிப்பதை ஆராய்ந்தார். அவரது கோட்பாடுகள் முழுமைக்காட்சி உளவியலில் செல்வாக்கு பெற்றன. ஆனால், தொடக்ககாலத்தில் செல்வாக்குப் பெற்றவர்களின் பட்டியலில் ரூபின் பொதுவாக சேர்க்கப்படவில்லை. அவர் தன்னை ஒரு முழுமையாக்காட்சி உளவியலாளராக கருதவில்லை. அவர் பரந்த அளவிலான கோட்பாடுகளை உருவாக்குவதற்கான அவர்களின் முயற்சிகளில் சந்தேகம் கொண்டவராகவே இருந்தார். ஆயினும்கூட, அவரது சொற்பிரயோகங்கள் தக்கவைக்கப்பட்டு, கர்ட் கோஃப்காவின் முழுமைக்காட்சி உளவியலின் கோட்பாடுகளில் இடம்பெற்றது.

1922 ஆம் ஆண்டில், ரூபின் கோபனாவன் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியரானார். அவர் 1951 ஆம் ஆண்டில் இறக்கும் வரை அதே பணியில் தொடர்ந்தார்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்கர்_ரூபின்&oldid=2801520" இருந்து மீள்விக்கப்பட்டது