கோபனாவன் பல்கலைக்கழகம்

கோபனாவன் பல்கலைக்கழகம் (University of Copenhagen; UCPH), டென்மார்க்கிலுள்ள பழமையான, இரண்டாவது பெரிய பல்கலைக்கழகமும், ஆராய்ச்சி மையமுமாகும். உயர்கல்வி படிப்பிற்கான பொது மையமாக (studium generale) 1479-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது, உப்சாலா பல்கலைக்கழகத்தையடுத்து (1477) இசுகாண்டினேவியாவிலுள்ள இரண்டாவது பழமையான உயர்கல்வி மையமாகும். இப்பல்கலைக்கழகம் 37,000-க்கும் மேலான மாணவர்களையும், 7,000-க்கும் அதிகமான பணியாளர்களையும் கொண்டுள்ளது. கோபனாவனைச் சுற்றிப் பல வளாகங்களை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. இதில் பழமையானது மைய கோபனாவனில் உள்ளது. பெரும்பாலான பயிற்சி வகுப்புகள் தானிசு மொழியில் கற்றுக் கொடுக்கப்பட்டாலும், பல பயிற்சி வகுப்புகள் ஆங்கிலத்திலும், சில இடாய்ச்சு மொழியிலும் நடத்தப்படுகின்றன. இதன் வரவு செலவுத் திட்டம் 2011-ல் 7,803,414,000 (DKK) ($1.4 பில்லியன்) தானிசு குரோனேவாக இருந்தது[9].

கோபனாவன் பல்கலைக்கழகம்
Københavns Universitet (டேனிய மொழி)
இலத்தீன்: Universitas Hafniensis
குறிக்கோளுரைஇலத்தீன்: Coelestem adspicit lucem
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
கழுகு வானுலக ஒளியைப் பார்க்கிறது
வகைபொதுத்துறை ஆய்வு பல்கலைக்கழகம்[1]
உருவாக்கம்1479; 544 ஆண்டுகளுக்கு முன்னர் (1479)
நிதிநிலைDKK 8.908 பில்லியன்
($1.338 bn) (2018)[2]
தலைமை ஆசிரியர்ஹென்ரிக் சி. வெஜெனர்[3]
கல்வி பணியாளர்
5,286 (2019)[4]
நிருவாகப் பணியாளர்
4,119 (2017)[4]
மாணவர்கள்37,493 (2019)[5]
பட்ட மாணவர்கள்21,394 (2019)[5]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்16,079 (2019)[5]
3,106 (2016)[6]
அமைவிடம்,
வளாகம்நகர்ப்புறம்
94.2 ha (மொத்தம்)
மாணவர் செய்தித்தாள்Uniavisen
நிறங்கள்         
மெரூன் மற்றும் சாம்பல்[7]
சேர்ப்புIARU
LERU
EUA
Europaeum
Universities Denmark[8]
இணையதளம்www.ku.dk
பல்கலைக்கழக முதன்மைக் கட்டிடம்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு