எட்டாம் வேற்றுமை
தமிழில் பெயரை பெயரை வேறுபடுத்திக் காட்டுவன வேற்றுமை (தமிழ் இலக்கணம்). தொல்காப்பியர் காலத்துக்கு முன்னர் தமிழில் வேற்றுமையை ஏழு வகையாக மட்டும் கொள்ளும் வழக்கம் இருந்தது. [1] தொல்காப்பியர் இதனை எட்டு எனக் காட்டினார். [2] எட்டாம் வேற்றுமை என எண்-வரிசையில் பெயரிடப்பட்டுள்ள இதனை விளி வேற்றுமை என இதன் செயல்பாட்டு நோக்கிலும் பெயரிட்டு வழங்கி வந்தனர். எழுவாய் வேற்றுமையில் வினையாற்றும் பெயர் அழைக்கப்பட்டு விளி கொள்ளும்போது எட்டாம் வேற்றுமையாக மாறும். [3] தொல்காப்பியத்தில் பெயர்ச்சொல் எட்டாம் வேற்றுமையாக மாறும் பாங்கு தனியாக 27 நூற்பாக்களில் விளக்கப்பட்டுள்ளன.
தொல்காப்பியருக்கு முந்திய காலத்தில் விளி-வேற்றுமையைப் பெயரது விகாரம் எனக் கருதினர். [4] [5] [6]
நன்னூலானது தொல்காப்பியர் வேற்றுமை எட்டு எனக் கொண்டதை வழிமொழிகிறது. [7] விளி கொள்ளும்போது இன்னின்ன ஈற்றெழுத்துச் சொற்கள் இன்னின்னவாறு திரிந்து விளி கொள்ளும் எனக் காட்டுகிறது.
திணை | விகுதி [10] | சொல் | சேய்மை விளி |
---|---|---|---|
உயர்திணை [11] | இ |
நம்பி நங்கை |
நம்பீ நங்காய் |
விளி கொள்ளும் மெய்யிறுதிச் சொற்கள்
தொகு- [ன்], [ர்], [ல்], [ள்] அல்லாத மெய்யெழுத்துக்கள் விளி கொள்ளா.
- தான், யான், நீயிர், அவன் [16], யாவன் [17] - என்பன விளி கொள்ளா.
திணை | விகுதி | பெயர் | சேய்மை விளி | அண்மை விளி |
---|---|---|---|---|
உயர்திணை | அன் ஆன் |
சோழன், சேர்ப்பன், ஊரன் சேரமான், மலையமான் |
சோழா, சேர்ப்பா, ஊரா சேரமான், மலையமான் (இயல்பு) |
சோழ, சேர்ப்ப, ஊர - |
விரவுப் பெயர்கள்
தொகுஉயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவான பெயர்களை விரவுப்பெயர் என்பர்.
பெயர் | விளி |
---|---|
சாத்தி | சாத்தீ |
பூண்டு [19] | பூண்டே |
தந்தை | தந்தாய் |
சாத்தன் | சாத்தா |
கூந்தல் [20] | கூந்தால் |
மகன் | மகனே |
விளி ஏற்கும் அஃறிணைப் பெயர்கள்
தொகு'ஏ' என்னும் விளி-உருபு ஏற்று வரும். எடுத்துக்காட்டு:
பெயர் | விளி |
---|---|
மரம் | மரமே |
அணில் | அணிலே |
நரி | நரியே |
சிறப்புக் குறிப்புகள்
தொகு- அம்மா சாத்தா - என்னும் தொடரில் அம்மா என்பது விளி. இது 'அம்ம' என்னும் சொல்லின் நீட்டம் [21]
- நம்பி என்பதன் அண்மை விளி நம்பி. சேய்மை விளி நம்பீ. மிகு-சேய்மை விளி நம்பீஇ. [22]
- தமன், தமள், தமர், நமன், நமள், நமர், நுமன், நுமள், நுமர், எமன், எமள், எமர், எம்மான், எம்மாள், எம்மார், நும்மான், நும்மாள், நும்மார் முதலான தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள் விளி ஏற்பதில்லை. [23]
அடிக்குறிப்பு
தொகு- ↑ வேற்றுமைதாமே ஏழ்' என மொழிப. (தொல்காப்பியம் 2-62)
- ↑ விளி கொள்வதன்கண் விளியொடு எட்டே (தொல்காப்பியம் 63)
- ↑ விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு, தெளியத் தோன்றும் இயற்கைய வென்ப (தொல்காப்பியம், சொல்ல்லதிகாரம் -118)
- ↑
"ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை
வேறென விளம்பான் பெயரது விகாரமென்று
ஓதிய புலவனு முளனொரு வகையான்
இந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்" - ↑ அகத்தியனார் நூற்பா
- ↑ நன்னூல் நூற்பா 291 சங்கர நமச்சிவாயர் உரை[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ <poe3m>ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள் வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை (நன்னூல் 291) பெயரே ஐ ஆல் கு இன் அது கண் விளி என்று ஆகும் அவற்றின் பெயர் முறை (நன்னூல் 292)</poem>
- ↑ பாகுபாடு தொல்காப்பியம் காட்டியுள்ள முறைமை
- ↑ தொல்காப்பியம், நன்னூல் ஆகியவற்றின் உரை மேற்கோள்கள்
- ↑ ஏனை உயிர்கள் விளி கொள்ளா
- ↑ அண்மைச்சுட்டு ஆயின் அனைத்தும் இயல்பாந் வரும்
- ↑ உகரம் குற்றியலுகரம்
- ↑ உயர்திணைப் பாங்கில் விளி கொள்ளாத பெயர்
- ↑ அளபெடை
- ↑ முறைப்பெயர்
- ↑ சுட்டுமுதற் பெயர்
- ↑ வினாவின் பெயர்
- ↑ அக்கினி தேவன்
- ↑ பாட்டனின் தந்தையாகிய பூட்டன்
- ↑ கூந்தலை உடையவள்
- ↑ தொல்காப்பியம் 2-150
- ↑ தொல்காப்பியம் 2-149
- ↑ தொல்காப்பியம் 2-151