எட்டு நாடுகளின் கூட்டணி

எட்டு நாடுகளின் கூட்டணி (Eight-Nation Alliance) என்பது பலதரப்பட்ட நாடுகளின் ராணுவ கூட்டணியாகும். இது 1900 ஆண்டு சீன பாக்சர் கலகக்காரர்களின் தாக்குதலிலிருந்து துணைத் தூதரகங்கள் மற்றும் கிறித்தவ மிஷனரிகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தப் படையில் சுமார் 45 ஆயிரம் துருப்புக்கள் இருந்தன. ஜெர்மனி, ஜப்பான், உருசியா, பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஆஸ்திரிய-ஹங்கேரி ஆகிய எட்டு நாடுகளிலிருந்து இந்த துருப்புகள் கொண்டுவரப்பட்டன.[1] பீகிங்கில் (தற்போதைய பெய்ஜிங்) இருந்த சர்வதேச துணைத் தூதரகங்கள் கிங் அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்பட பாக்சர் கலகக்காரர்களால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட பொழுது எட்டு நாடுகளின் கூட்டணியானது தங்களது ராணுவத் துருப்புகளை மனிதாபிமான தலையீட்டின் அடிப்படையில் அனுப்பின. தங்கள் நாட்டுக் குடிமக்கள் மற்றும் துணை தூதரகங்களில் தஞ்சம் அடைந்த குறிப்பிடத்தக்க அளவிலான சீன கிறித்தவர்களையும் பாதுகாக்க அவை படைகளை அனுப்பின. பாக்சர் கலகமானது கூட்டணியின் வெற்றிக்கு பிறகு பாக்சர் நெறிமுறை கையெழுத்துடன் முடிவடைந்தது. கூட்டணியின் உறுப்பினர்கள் சீனாவிலேயே தங்கினர். பெய்ஜிங் மற்றும் மற்ற நகரங்களை ஒரு ஆண்டுக்கும் மேலாக சூறையாடினர்.[2]

உறுப்பு நாடுகள் தொகு

எட்டு நாடுகளின் கூட்டணிப் படை
 
1900ஆம் ஆண்டில் எட்டு நாடுகளின் கூட்டணியின் துருப்புக்கள் (உருசியா தவிர).
இடமிருந்து வலம்: பிரிட்டன், ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா, இந்தியா
ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி, ஜப்பான்
நாடுகள் போர்க்கப்பல்கள்
(எண்ணிக்கை)
கடற்படையினர்
(வீரர்கள்)
ராணுவம்
(வீரர்கள்)
  சப்பான் 18 540 20,300
  உருசியா 10 750 12,400
  பிரித்தானியா 8 2,020 10,000
  பிரான்சு 5 390 3,130
  ஐக்கிய அமெரிக்கா 2 295 3,125
  செருமானியப் பேரரசு 5 600 300
  இத்தாலி 2 80 2,500
  ஆத்திரியா-அங்கேரி 4 296 தெரியவில்லை
மொத்தம் 54 4,971 51,755

உசாத்துணை தொகு

  1. Hall Gardner (16 March 2016). The Failure to Prevent World War I: The Unexpected Armageddon. Routledge. பக். 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-03217-5. https://books.google.com/books?id=R-K_CwAAQBAJ&pg=PA127. 
  2. Hevia, James L. 'Looting and its discontents: Moral discourse and the plunder of Beijing, 1900–1901' in R. Bickers and R.G. Tiedemann (eds.), The Boxers, China, and the world Lanham, Maryland:Rowman & Littlefield Publishers, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டு_நாடுகளின்_கூட்டணி&oldid=3415249" இலிருந்து மீள்விக்கப்பட்டது